ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்.01 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2017

ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்.01

யாருக்குத்தான் வியாதியோடு வாழப் பிடிக்கும், வியாதி வரும்போது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். நம்மால் பள்ளிக்கு போகமுடியாது, எந்த வேலையும் செய்ய முடியாது, வீட்டை சரியாக கவனிக்க முடியாது, நம்முடைய வருமானம் குறையலாம், அதுமட்டுமில்லாமல் யாராவது ஒருவர் கூடவே உ நம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைக்கும் பணத்தை வாரியிறைக்க வேண்டியிருக்கும்.

"வருமுன் காப்போம்" என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழி சொல்வதுபோல் சில முயற்சிகளை எடுக்கும்போது நோய் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அப்படியே வந்தாலும் அதன் பாதிப்பு அதிகமாகாது பார்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியமாக வாழ என்ன செய்யலாம் சில வழிகளை தொடர்ச்சியாகச் சொல்கிறோம்.

அதில் ஒன்று....
#சுத்தமாக_இருங்கள்.
.......தொற்றுநோய் தாக்காமல், ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறீர்களா...? அதற்கு "கைகளைக் கழுவுதல்" மிக அவசியம். கைகளை வைத்து கண்களை கசக்கும்போது மூக்கை தேய்க்கும்போது, கைகளில் உள்ள கிருமிகளால் சளி,காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றிவிடும். அதற்கு நாம் எப்போதுமே கைகளைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால் மோசமான நோய்கள் பரவுவதை குறைக்கலாம். ஒவ்வொரு வருடமும் "5 வயதிற்கு கீழுள்ள் சுமார் " 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களினால் இறந்துபோகின்றனர். கைகளை கழுவுதல் மூலம் எபோலா போன்ற உயிர்கொல்லி நோய்களின் இருந்து தடுக்கலாம்.

நாம் எல்லோருமே ஆரோக்கியமாக இருப்பதற்கு கைகளை கழுவவேண்டும். அதுவும் ஒரு சில சமயங்களில் கைகளை கழுவுதல் மிகவும் முக்கியம்...

#எப்போதல்லாம் நாம் கைகளை கழுவ வேண்டும்:

0 கலிபறையை பயன்படுத்திய பின்

0 குழந்தைகளுக்கு 'டயாப்பர்' மாற்றிவிட்ட பின்பு: அவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த உதவிசெய்த பின்பு.

0 காயத்திற்கு மருந்து போடும் முன்னும் பின்னும்.

0 உணவை சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு, சாப்பிடுவதற்கு முன்பு.

0 தும்மிய பின்பு, இருமிய பின்பு, மூக்கை சிந்திய பின்பு.

0 விலங்குகளை தொட்ட பின்பும், கழிவை அகற்றிய பின்பும்.

0 குப்பைகளை கொட்டிய பின்பு,

#இப்படையாக பல சந்தர்ப்பங்களில் சுந்தம் செய்யப்படும் கைகளை நன்றாக கழுவுவது எப்படி...?

0 குழாய்களில் இருந்து வரும் தண்ணீரில்  கைகளை நனைக்கவேண்டும். பிறகு சோப்பு போட வேண்டும்.

0 நுரை வரும்வரை கைகளை நன்றாக தேய்க்க வேண்டும். நகங்கள், கட்டை விரல்கள், விரல்களுக்கு இடையேயுள்ள பகுதிகள், கைகளின் பின்புறம் ஆகியவற்றை நன்றாக தேய்க்கவேண்டும்.

0 குறைந்தது 20 நொடிகள் கைகளை தேய்க்க வேண்டும்.

0 குழாயில் இருந்து வரும் சுத்தமான தண்ணீரில் சோப்பு நுரை போகும்வரை கைகளை கழுவ வேண்டும்.

0 சுத்தமான துணியை வைத்து அல்லது ரிஷு பேப்பரை வைத்து கைகளை துடைக்க வேண்டும்.

#இந்த சாதாரண விஷயங்களை செய்தாலே நிறைய நோய்கள் வராமல் தடுக்க முடியும். உயிரையும் காப்பாற்ற முடியும்.

தொடரும்...
Gaf பிரதான ஆசிரியர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages