ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.), உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும் என்ற உத்தரவு நேற்று முதல் (1-ந் தேதி) அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.), உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி, அளவு, உற்பத்தியான நாடு, வாடிக்கையாளர் புகார் மைய (கஸ்டமர் கேர்) விவரங்கள் போன்ற அனைத்தும் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். நுகர்வோர் படிப்பதற்கு வசதியாக குறிப்பிட்ட அளவில் அந்த எழுத்து மற்றும் எண் இருக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு நேற்று முதல் (1-ந் தேதி) அமலுக்கு வந்தது. இதற்காக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை செயல்படுத்துவதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment