அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்- தொடர் 13 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 13 October 2018

அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்- தொடர் 13

அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்...
தொடர்_13

எது நேர்ந்தாலும் அந்தக் காலத்தில்தான் நடனத்தின் உச்சத்தில் அக்கரைப்பற்றில் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் பெற்றிருந்தேன். ஆரம்பக் கல்வி அல்/பாத்திமியா பாடசாலையில் கற்று பின் அஸ்றாஜில் தொடர்ந்தேன்.

அதுவும் எனது முதல் நடன அறிமுகம் ஆசிரியர் தின நிகழ்வில் அஸ்றாஜ் மஹாவித்தியாலையத்தில் திருடா திருடி திரைப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலின் மூலம் அறிமுகமாகி பலத்த வரவேற்பில் பல மேடைகளில் அதே பாடலுக்கு ஆடித்திரிந்த காலமது....

அதிபர் சஹாப்தீன் மட்டுமல்ல பல ஆசிரியர்களும் என்னை எங்காவது கண்டால் ராசா என்று புனைப்பெயர் வைத்தே அழைத்தனர்.

ஏன் கடற்கரையில் முழுநிலவில் கலை இரவு பேரியல் அஸ்ரப் அதிதியாக சிறப்பித்த அந்த நிகழ்வில் சேகுவின் அழைப்பின் பேரில் அதே மன்மதராசா பாடலுக்குத் தான் ஆடினேன்.

ஆனால் இடையில் ஒருதரம் ஹிக்மா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் டான்சர் திரைப்படத்தில் சொன்னது என்ன சொன்னது என்ற பாடலுக்கு எனது ஒரு காலைக் கட்டிக்கொண்டு ஆடியிருந்தேன். படத்திலும் அதே நிலைதான் கதாநாயகனுக்கு நிஜத்திலே கால் ஒன்று இல்லை.

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அந்தநாள் காதலி நிலா எனக்கு வலித்திருக்கும் என்று எண்ணி கண்ணிர் வடித்ததும் அதே நாள்தான் அவளுக்கு நான் சொன்ன ஆறுதலோடும் அவள் நடனத்தை விடவேண்டும் என்று எனக்குச் சொன்ன அறிவுரையோடும்.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு நடனம் கற்பிப்பதை இடை நிறுத்தி பெரிய மாணவர்கள் இளைஞர்களுக்கு என்னால் கற்பிக்கப்பட்டது பின் அதையும் இடை நிறுத்தி  திரைப்படத்துக்குள் நுழைந்துகொண்டேன்.

 திரைப்படம் என்றவுடன் தான் நினைவு வருகிறது....

நாங்கள் நடாத்திய gaf award நிகழ்வில் பதுர்டீன் காக்காக்கும் விருது கொடுக்கப்பட்டதால் அவருடைய மகன் சஹீரை வைத்துத்தான் ஒளிப்பதிவு செய்தோம்.
அடுத்தநாள் அவசர வேலையாக அவர் வீட்டுப் பக்கம் போனபோது கொஞ்சமாகப் பார்த்துவிட்டு நாளை ஹாட்டிஸ்க் கொண்டு வந்து எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி அடுத்தநாள் போகச் சொன்னார் அந்த vdo வக் காணல்ல அழிந்துவிட்டது என்று.
எத்தனையோ நடந்தும் எரியாத என் மனம் அன்றுதான் பத்தி எரிந்தது.
எதற்காக அப்படிச் செய்தார் என்பது அவருக்கும் இறைவனுக்கும்தான் தெரியும்.
மூத்தவர் அவர் பறவாயில்லை.
இந்த விடையத்தில் அவருக்கு மன்னிப்பும் இல்லை.

இந்த கலைப் பயணத்தில் நண்பர் நாழிர் காக்கா எனக்கு இசை அமைப்பாளர் றாஜ் அண்ணா, முர்சித் என்று சில கலைஞர்களோடு நட்பாய் இணைத்து வைத்தார்.
அதேபோலத்தான் நண்பர் சாஜித்தோடும் பல இலக்கிய நிகழ்வுகளுக்கும் போய் பல இலக்கியர்கள் கலைஞர்களின் தொடர்பும் கிடைத்தது.
சில நிகழ்வுகளில் பாடலும் பாடியிருந்தேன்.
Spbயின் சங்கீத மேகம் என்றால் எனக்கோர் அலாதிப் பிரியம் எந்த இசை நிகழ்வாக இருந்தாலும்சரி, கெரோக்கி நிகழ்வாக இருந்தாலும் சரி முதலில் இந்த சங்கீத மேகம் பாடல்தான் என்னால் பாடப்படும்.
முழுவதும் அறிவிப்பில் தொகுத்து வழங்குவதால் வேறு ஒரு சில பாடலோடு நிறுத்திக் கொள்வேன்.

ஆனாலும் கெரோக்கியில் நான் எத்தனை பாடல் பாடினாலும் நண்பன் சாஜித் என்னை. நான் தேடும் செவ்வந்திப் பூவிது. பாடலைத்தான் அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பான் அவனுக்காகவே அந்தப் பாடலும் எனது விருப்பப் பாடலாக மாறியது பின் இசையையும் இடையில் நிறுத்தவேண்டி ஏற்பட்டுவிட்டதும் எழுத்துலகுக்குள் நுழைந்துவிட்டேன்.

அதேபோல சாஜித்தின் குரலுக்கு ஒத்துப் போகும் அவருக்குப் பிடித்த பாடல் அவர் பாடுவதால் எனக்கும் பிடித்துப்போன பாடல்.
பூங்கதவே தாள் திறவாய் அவர் பாடும்போது இடையில் வரும் ஹம் ஹம்மிங்கை மட்டும் நான் கொடுத்துக்கொள்வேன்.

 இந்த இடத்தில் சாஜித் நாழிர் இருவரையும் நினைவு கூறுவதோடு நன்றியும் கூறிக்கொண்டவனாக...
எனது போனும் நானும் திரைப்படத்தின் அறிமுகப் பாடலான வரலாற மாற்றும் எங்கள் தமிழ் சினிமா பாடல் சினியுலகில் வெளியாகி பல்லாயிரம் பார்வையாளர்களைத் தாண்டியது.
#தமிழ்_சினிமாவைப்_பற்றிய_கெத்துப்_பாடல்_என்று_பதிவிறக்கியிருந்தார்கள்.

#வரலாற மாற்றும் எங்கள் தமிழ் சினிமா
பெரும் வலியோடு காக்கவைக்கும் தமிழ் சினிமா
துணிவோடு போராடும் தமிழ் சினிமா
இந்த உலகங்கும் பாராட்டும் தமிழ் சினிமா.
தில்லானா பாட்டுப்பாடும் தமிழ் சினிமா
ரொம்ப தில்லாக வாழவைக்கும் தமிழ் சினிமா
பல்லானா ஆட்டம் போடும் தமிழ் சினிமா 
ஒன்னப் பவர்புள்லா மாத்திப்புடும் தமிழ் சினிமா.

இது தமிழ் சினிமா....
எங்க தமிழ் சினிமா.....
நம்ம உறவுக்கல்லாம் கத சொல்லும் சினிமா.

காசு பணம் தேடும் கூட்டம் உலகில் உள்ளது பாரு இந்த சினிமா உலகில் இல்லையன்றால் லைfபு லாங்கு போbறு

தெருத்தெருவா வாய்ப்புத் தேடி தேய்ந்து போனது காலு எனக்குத் தெரிந்ததல்லாம் சேத்துவச்சு சினிமா செஞ்சன் பாரு.

இது தமிழ் சினிமா....
எங்க தமிழ் சினிமா.....
நம்ம உறவுக்கல்லாம் கத சொல்லும் சினிமா

MGRஎத் தந்ததும் எங்க தமிழ் சினிமா
நம்ம நம்பியாரத் தந்ததும் எங்க தமிழ் சினிமா
சூப்பஸ்ட்டாரத் தந்ததும் எங்க தமிழ் சினிமா
இப்ப பவஸ்ட்டாரத் தந்ததும் எங்க தமிழ் சினிமா.

உனக்குள்ளே ஒரு இதையம்
உனக்குள்ளே ஒரு கனவு
உனக்குள்ளே ஒரு பணிவு
உனக்குள்ளே ஒரு துணிவு

உனக்குள்ளே ஒரு நடிகன்
உனக்குள்ளே ஒரு இமயம்
உனக்குள்ளே ஒரு மிருகம்
உனக்குள்ளே ஒரு மனிதன்

வரலாற மாத்திப்போடும் வலியோடு காக்கவைக்கும் துணிவோடு போராடும் சினிமா சினிமா.
தில்லானா பாட்டுப்பாடும் தில்லாக வாழவைக்கும் பல்லான ஆட்டம்போடும் சினிமா சினிமா.

MGRரு இல்ல
இங்கு நம்பியாருமில்ல
சூப்பஸ்ட்டாரு இல்ல
இங்கு பவர்ஸ்ட்டாருமில்ல

நீதான் ஹீரோ மச்சி
வாழக்கா பச்சி 
இது நம்ம சினிமா மச்சி. மச்சி மச்சி

 இதன் முதல் வெளியீடு tfc மண்டபத்தில் நடைபெற்றது. சர்மில், றசாக் சேர், றாஜ் என்று பல அதிதிகள் வந்திருந்தாலும் பிரதம அதிதியாக அறிவிப்பாளர் al.ஜபீர் அவர்களை அழைத்திருந்தோம் அந்த நேரம் அவர் தொலைக்காட்சியில் பணிபுரிவதால் எங்கள் பாடலையும் ஒளிபரப்புவார் என்ற நம்பிக்கையில்.

பாடல் வரிகள் நடிப்பு இயக்கம் அனைத்தும் நான் செய்தாலும்.
ஒளிப்பதிவு சாஜித் அவர்களும், இசை ஹுமாப்பிரியன், எடிட்டிங் காரைதீவு சஜித், பாடலைப் பாடியிருந்தார் சபான், லோஜிதாஸ்.

மற்றும் கபிலன், நந்தன், ரசூல்டீன், நஜாத், றஜா, ஹிஜாஸ், என்று பல இளைஞர்களின் ஒத்துழைப்புடன் செய்திருந்தும் எனது சில மாணவர்கள் என்னுடன் நடித்தும் இருந்தார்கள்.

இந்த ஜபீரின் இரண்டாம் அறிமுகம் எனக்கு
 சாஜிதோடு சென்ற ஒரு இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் முதல் அறிமுகம் அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் நான் தொகுத்து வழங்கியதில்தான் ஏற்பட்டது.

அன்று சூப்பர் ஸ்ட்டார் இசைக்குழுவின் இசை அவருடைய மகனின் கத்னா வைபவத்தை சிறப்பிக்க என்று நினைக்கிறேன்.

நூறுல்லா குழுவோடு நான் என்னோடு அர்ரபாத் அஸ்ரப் சேர் என்று சிலர் சென்றபோது. அங்கு பல வானொலி அறிவிப்பாளர்கள் ஒலிவாங்கியில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நான் அமைதியாக இருந்துவிட்டு இசை ஆரம்பிக்க எனது அறிவிப்பையும் காட்டினேன். உள்ளுக்குள் பதட்டம்தான் ஆனால் நான்கு பாடலின் பின் இந்த அறிவிப்பாளர்கள் என்னை உள்ளே அளைத்து தம்பி உனது அறிவுப்பு அழகாக உள்ளது உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று.
அவர்கள் அன்று வாழ்த்தி என்னை ஊக்குவித்த போதிருந்தே...... என்னில் ஓர் துடிப்பும் அறிவிப்பில் ஒரு மாற்றமும் வரத்துவங்கியது.

ஆனால் அன்புக்குரிய ஜபீர் எங்கள் பாடலை  ஒளிபரப்பவில்லை. பலமுறை அவருடைய முகப்புத்தக உள்பெட்டியில் கேட்டிருந்தும் வாட்சப்பில் கேட்டிருந்தும் காரணமும் சொல்லவில்லை கணக்கும் எடுக்கவில்லை.
ஆனால் நம்நாட்டு மொக்கப் பாடலல்லாம் போடும்போது எங்கள் பாடல் எவ்வளவோ மேல்.
அதர்க்காக நூறுவீதம் சரியாகச் செய்தோம் என்றும் வாதிடவில்லை.
இருத்தபோதிலும் பலமுறை எங்களுக்கு சில உதவிகளைச் செய்த tfc. றிஸ்வான் காக்காக்கு நன்றிகள்.

பிறகு ஓர்ரிரு வாரங்களில் எனது புகைப்படத்தைப் போட்டு படு மோசமாகவும் என்மீதும் எனது குடும்பம் பெற்றோர் மீதும் அவதூறுகள் சுமத்தி ஒரு விமர்சனத்தை #றாசி_முஹம்மட்_ஜாபிர் எழுதியிருந்தார்.
வாசித்து நொந்துபோன மனதுடன் பதிலுக்கு அவரின் சில கடந்தகால போதை அனுபவத்தை முகப்புத்தகத்தில் பதிவுசெய்துவிட்டு பின் நீக்கிவிட்டேன்.
ஏன் அவருக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கவேண்டும்தான.
ஆனால் இன்று அவரின் சில ஆய்வு எழுத்துகளுக்கு ரசிகனானேன்.
எல்லாவற்றையும் கடந்தால்தான் சாதிக்கலாம்.

ஆ.....ஹ்....அடுத்தநாள் திருமணம் என்று சொன்னேனே ஆம் குறிப்பிட்ட திகதியில் மாஷா அல்லாஹ் கோலாகலமாக நடந்தது எனது திருமணம்.

எனது அழைப்பை ஏற்று நண்பர்கள் மற்றும் பலரும் வந்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக எனது சக ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தது மகிழ்ச்சியைத் தந்தாலும் முறுகலில் இருந்த றொசான்.cc எனது அழைப்பை மதித்து வந்திருந்தார் மிக்க மகிழ்ச்சி. வயதானவர்கள் தங்கள் வயதின் பக்குவத்தை சில நேரங்களில் காட்டிவிடுவர்.

அதன் பின்தான் முறுகல் இன்னும் முத்திப்போனது. எனது வாயும் சும்மாயிருப்பதில்லை.

இந்த றொஸானையும் கொமிஸ்னர் அஸ்மியையும் பிடிக்காத சிலர் அல்லது அவர்கள் செயற்பாட்டில் அதிர்ப்தியில் உள்ள சிலர் பேக் ஐடீக்கள் மூலம் இவர்கள் இருவருக்கும் சரமாரியாக எழுதினார்கள்.
அதில் சில அவதூறுகளை என்னால் ஏற்க முடியாமல் போனாலும் ஒருசில உண்மைகளைக் கண்டேன்.
அப்படியே ஒருநாள் எங்கள் எல்லோரையும் சத்தியத்துக்கு அழைத்தார்கள். 
ஒவ்வொருவரையும் நான் இதற்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லை என்று சத்தியம் செய்யும்படி.

 சத்தியமாக நான் சம்மந்தம் இல்லைதான்.
சரி மூடிக்கிட்டு சத்தியத்தப் பண்ணிட்டு வராம நான் சொன்னன் இந்த பேக் ஐடி எழுதியிருக்கும் விடையம் பொய் எண்டு நீங்க சத்தியம் பண்ணுங்கோ எங்களுக்குச் சம்மந்தம் இல்லன்னு நாங்க பன்னுறம் எங்க.

எப்ப தப்பித்துக் கொள்ளுற எண்டு காத்திருந்த பேக் ஐடி சொந்தக்காறன் கூச்சலிட மிச்சாக்களும் துள்ள யாரும் சத்தியம் செய்யாமல் பளி என்மேல் சுமத்தப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்.

அதைத் தாங்க முடியாத நண்பன் சாஜித் ஏண்டா அப்படிச் சொன்ன எண்டு எனக்கிட்ட கேட்க கோவத்துல இருந்த நான் அவனுக்கு ஏச மூன்று நாள் பேசாம இருந்து பிறகு பேசிட்டம் எங்கள் நட்பும் புரிதலும் அப்படி பின் றொசான்.cc உடனான முறுகல் நிலைத்துப்போனது...

பிறகன்ன அடுத்த இடமாற்றத்துக்குத் தயார் ஆன நான் ஆதன வரிப்பிரிவில் கடமையாற்றினாலும் அப்பப்போ பஸ்தரிப்பிடக் கட்டிடத்தில் பொருத்தப்பட்ட விளம்பர தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சில கடைகளுக்கு விளம்பரம் செய்து கொடுத்துக்கொண்டு இருந்ததால் குறுகிய வருமானமும் கிடைத்தது. எனது கமெராவில் ஒளிப்பதிவு செய்து நாங்களே எடிட்டிங்கும் செய்ததால்.
இரண்டிற்கும் நண்பர் மாஹிர் உதவியாக இருந்தார். 

இது இப்படி இருக்க நம்முட பதுர்டீன் காக்காவும் ரெண்டு விளம்பரத்தச் செய்துபோட்டு நாங்க செய்ததல்லாம் அவர் செய்ததாகச் சொல்லி ஓடரும் எடுத்தது இல்லாம முகப்புத்தகத்திலும் பதிவிறக்கம் செய்திருந்தார் பாவம் அவர் பதிலுக்கு ஆதார பூர்வமாக நான் இறக்கிய பதிவில் மூக்குடைந்து போனார்.
இருக்கட்டும் விடையத்துக்கு வருவோம் 

இப்படி
அடிக்கடி  பஸ் நிலையத்துக்குச் சென்று பார்வையிடுதலும், இரவு பத்து மணியோடு நிறுத்தவேண்டும் என்பதால் காலையும் மாலையும் அங்கு செல்லவேண்டி வரும்.
சக்கி காக்கா இன்னும் சிலரையும் சுழட்சி முறையில் மாற்றிமாற்றி பணிக்குப் போட்டார்கள்...

#தொடரும்_gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages