அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர் - தொடர்_14 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 14 October 2018

அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர் - தொடர்_14

அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்...- தொடர்_14

எத்தனை சுழற்சிகளை இந்தக் காரியாலயம் செய்தாலும் மனித இதயத்தின் வேதனை அவமானச் சுழற்சியை இவர்களால் சீர்செய்ய முடியவில்லை.

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வார்கள் அது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் அரசியல் சாக்கடை நியமணங்களால் சில பட்டதாரிகளும் சாக்கடையானர்.
குப்ப அள்ளுற தொழில்தானே, கான் வெளிசாக்குற தொழிலாளிதானே என்று எங்களுக்கு மேலே உள்ள சில பெண் உத்தியோகத்தர்கள் சொல்லி இந்த அரசியல் நியமனம் பெற்றவர்களை மட்டம் தட்டியதாகவும் கேள்வி.

இருந்தும் எங்களோடு ஏற்றத்தாழ்வு இன்றி சரிசமமாக பழகிய.
அன்வர், மக்பூல், ஹபீபுர்ரஹ்மான்,  றிம்சான், ஜெயந்திரன், ஹலிம், சிபா என்று சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதுபோலத்தான் என்னால் மறக்கமுடியாத என் சக ஊளிய நண்பர்களும் உண்டு. நௌபிர், ஹமிட், அஹமட், முபாஸ், மபாஸ், நிலௌபர், மஜீத், றிஸ்வான், அனிட், சகி, றிஸ்வி, சாமில், சாஜித், சியான், ஹுசைன், அன்சார், பைறுஸ், ஆசிக், அப்ரத், பஸ்லி, ஹசன், முபாரிஸ், றக்கீஸ், சுஜாப் என்ற நெடிய பட்டியலே உண்டு.

இவர்களின் மனதை வெல்ல சிலரால் முடிந்தும் பதவி நிலைகளில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் சில உத்தியோகத்தர்களால் முடியவில்லை. ஏன் மேயராலேயே முடியவில்லை.

ஒரு மனிதன் அவன் சிறுவனாக இருந்தாலும் சரி மரியாதை, அன்பு இதைத்தான் எதிர்பார்ப்பர். ஆனால் இந்த மேயர் சகியால் கூட அவர்மீது நம்பிக்கை வைத்தவர்களின் உறவு, நட்பைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல்தானே போய்விட்டது.
 கவலைதான் என்ன செய்ய அரசியல் செய்யும் அவர்கள்தானே கூட இருப்பவனின் உறவைத் தக்கவைத்துக்கொள்ள பழகவேண்டும்.ஏதோவொரு வகையில் தனக்கான லாபத்துக்காக மட்டும் சிலர் கூடவே இருந்தாலும் தன்மானம் உள்ள என்னைப்போல் சிலர்தான் துணிந்து வெளியேறுகின்றனர்.

ஹெல்த் லேபறோ, ரோட் லேபறோ இந்த நியமணங்களால்தானே சிலர் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்கின்றனர். அதேபோலத்தான் பல திருமணங்களும் நடந்து எமது பிராந்திய ஏழைப் பெண்களுக்கும் வாழ்வு கிடைத்திருக்கிறது.

அந்த நன்றிக்கடனும், விசுவாசமும் கட்சிமீதும் தலைவர் மீதும்  நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் இதயங்களில் இருக்கத்தான் செய்யும்.
எங்கள் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.

இவர்கள் கூட விசுவாசத்திலோ சுயலாபத்திலோ இயங்கும் ஒரு போராளி யை பயன்படுத்தி பின் கணக்கில் எடுக்காமல் அடுத்த தேர்தல்வரை மௌனமாக இருந்து பின் மீண்டும் அரவணைத்து தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் இயந்திரமாகவே சிலரை இவர்கள் பார்த்தாலும்.மனித மனங்களைப் புரிய மறுக்கின்றனர்.

ஒன்று ஒருவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டவோ ஆலோசனை வழங்கவோ அவனைத் தனியே அழைத்துச் சொல்லமாட்டார் இந்த மேயர் சகி. எல்லோரையும் அழைத்து தனது அதிகாரத்திமிறைக் காட்டும் இவர் ஒவ்வொருவரின் குறைகளை தவறுகளை பகிரங்கமாக எல்லோர் மத்தியிலும் சொல்லி அப்படியே கூனிக் குறுக வைத்துவிடுவர்.

என்ன செய்வது தலையழுத்து என்று பொறுத்துப்போகும் ஊழியர்கள் ஒருவகையில் பாவம்.
ஆனால் கொத்தடிமைப் பைத்தியங்கள் என்றும் கையாலாகாத் தனம் என்றும்தான் நான் சொல்வேம்.

ஒரு அரச தொழிலுக்காகவும் குறைந்த சம்பளப் பணத்துக்காகவும் தன்மானத்தை இழந்து வாழுரத விட செத்துமடிவது மேல் என்ற கோட்பாட்டில் வாழ்பவன் நான்.
பாவம் இவர்கள் பைத்தியக் காரர்கள்.

இந்த அதிகாரத் திமிறிகளை ஒரு கூட்டம் வாழ்த்தினாலும் இன்னொரு கூட்டம் பகிரங்கமாக தூற்றிக்கொண்டும் அவமானப்படுத்திக்கொண்டும் இருந்தாலும் அவர்களைப் போலவே மத்தவனுக்கும் மானம் மரியாதை இருக்கிறது என்று இந்த அதிகார வர்க்கத்துக்கு புரிவதில்லை ஏன் இவர்களுக்கெதிராக குறைகளைத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவனுக்கு எதிராகப் போராடும் ஒரு தொண்டனின் மானத்துக்கு மரியாதையை இவர்கள் கொடுக்கத் தவறுவது இன்னும் எம் மனங்களில் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. ஒன்று
துரோகியாக்கி களட்டிவிடுவார்கள் இல்லை நேரம்பார்த்துக் ஒதுங்கிவிடுவார்கள்.

எதிராகப் பேசினால் ஊர்த்திரோகி என்றும் ஆதரவாகப் பேசினால் கொத்தடிமை என்றும் இவர்கள் எண்ணுவது எந்தவகையில் நியாயமோ தெரியாது.
காசு, கார், வீடு, சொத்து, நாலு கள்ள வளவு ரெண்டு கொன்றைக்கில் ஒழச்ச மக்கள் பணம் இருந்தால் மரியாதை, பொன்னாடை, வாழ்த்துப்பா.
 உண்மை, அறிவு, விசுவாசம் இருக்கும் நாம் என்ன பன்னாடைகளா...?

இவர்கள் மூலமாக கிழக்கில் அபிவிருத்திமழை பெய்தாலுன் அதில் நாங்கள் நனைந்தாலும் துரோக மழையிலும் அவமான மழையிலும் நாங்கள் நனைந்த வரலாறுகளும் உண்டு.
ஏன் செவுடர்களாகவும் ஊமைகளாகவும் மந்தைகளாகவும் வாழ்ந்த காலமும் உண்டு என்ன செய்வது நன்றிக்கடன் என்ற மாயேயிலேயே நாம் சிக்கிக்கொண்டோம் எங்கள் சுய சிந்தனையும் சுய அறிவும் செல்லாக்காசாகவே போய்விட்டது.

செருப்புத் தெய்ப்பவனின் சுதந்திரம் கூட இல்லாம இந்த அரச அடிமைத் தொழிலில் சிக்குண்டு அடுத்த இடத்துக்கு நகர முடியாமல் ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி தனது எதிர்காலத்தை தெரிந்துகொண்டே இப்படியான அதிகார வெறியர்களிடம் சிக்குண்டு நாசம் செய்யும் இந்தப் போராளிகளின் சந்ததிகள் என்னவாகுமோ...! 

அதிகார திமிறு வர்க்கமே நீங்கள் நினைக்கிறீர்கள் உங்களிடம் அதிகாரம் இல்லாததால் பிரிந்து செல்கிறார்கள், எதிர்த்துப் பேசுகிறார்கள் என்று இல்லை நீங்கள் அதிகாரம் இழந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான். மனக்கிடங்குகளில் உள்ள அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள்.

பொறுத்துப் போவோம் என்று பொத்தியிருக்கும் பொண்ணைப் பட்டியலில் இருந்தும், அதிகாரத்திடம் மண்டியிடும் அடிமைப் பட்டிய்லில் இருதந்தும், தொழிலுக்காக ஜால்ரா அடிக்கும் பச்சோந்திப் பட்டியலில் இருந்தும் எனது பெயரை தயவுசெய்து அளித்துவிடுங்கள்.

உன்மைக்கும், நேர்மைக்கும், விடுதலைக்கும், தன்மானத்துக்கும், சுமூதாயத்துக்காகவும் பொராடி வெற்றி பெறும் பட்டியலில்.
 அல்லது நெஞ்சில் நீங்கள் எய்த அம்புகளால் காயமுற்று வீர மரணம் அடைந்த மாவீரரகளின் பெயர்ப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்....
#தொடரும்_Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages