அன்று_நான் ஒரு கட்சியின் வேட்பாளர்.
- தொடர் 15
எது செய்தாலும் எங்கள் காரியாலயமும் கட்சியும் எங்களை அப்பப்போ உயர்த்திப் பார்க்கும்.
ஒன்று சுதந்திர தினத்துக்கு மின் கம்பங்களில் தேசியக்கொடி ஏற்றுவதர்க்கு ஏற்றி ரசிப்பார்கள்.
ஏதும் நிகழ்வுகளுக்கு வீதி முழுக்க கொடி கட்ட ஏற்றி ரசிப்பார்கள்.
மரங்களில் கந்து தறிக்க ஏற்றி ரசிப்பார்கள் இப்படி எங்களை அவர்கள் உயர்த்தத் தவறியதில்லை.
பதவி நிலைகளிலும் நாங்கள் உயர்ந்துவிடக் கூடாது, குடும்ப பொருளாதார ரீதியிலும் நாங்கள் உயரக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து 2012 நியமனம் கிடைத்து இன்று 2018 வரை பணியாற்றும் ஊழியர்களுக்கு கென்பமேசன் கொடுக்காமல். உங்கள் நியமணம் சொல்லும் தொழிலுக்கு அனுப்புவோம் என்று பயம் காட்டி வைத்திருக்கிறார்கள்.
அதையும் தாண்டி யாராவது எதிர்த்தோ பணிந்தோ கேள்விகள் கேட்டால் நைட் வாச்சர், வீதியில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல், ஐந்தாம் கட்டை குப்ப மேட்டுக்கு மாற்றுதல் என்று பல இடங்களுக்குப் போட்டு பின்னால் இரண்டு மேற்பார்வையாளர்களைப் போட்டு வறுத்தடுப்பார்கள்.
அண்மையில் EB EXAM எழுதிய ஊழியர்கள் பலரை வேண்டும் என்றே சித்தியடையாமல் ஆக்கிவிட்டு. அவர்களுக்கு பிடித்தவன், குடிக்கப் பால் கொடுப்பவன், தென்னங் குருத்தில் ஏற்றி வைத்து புகழ் பாடுபவன், வீட்டுவேலை செய்து கொடுப்பவன் என்று சிலரை மட்டும் சித்தியடைய வைத்தனர்.
ஒருசிலரைத் தவிர மற்றவர்களுக்கு அரச சலுகைகள் எதுவும் இல்லை ஓவர் டைம் இல்லை, இஸ்ட்டேசனறி பொருட்கள் இல்லை ஏன் யூனிபம் கூட சொந்தக் காசில்தான் சபையிடமே வாங்கிப் போட்டிருக்கும் நிலை இந்த ஊழியர்களுக்கு.
இப்படியான அனியாங்களை இந்த ஊழியர்களுக்குச் செய்ய யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது அரசா....?
கென்பமேசன் கொடுக்காமல் பயம்காட்டி வைத்துக்கொண்டு அரசியல் தேவைகளைச் செய்ய யார்காரணம்...? தலைவர் அதாவுல்லாஹ் வா...?
இவர்களை கொத்தடிமையாக வைத்து பலிவாங்க யார் காரணம்....?
ஆணையாளரா....?
கவர்னரா....?
அஹமட் சகி மேயரா...?
இபடிப் பல கேள்விக்கு விடை எமக்குத் தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாது.
இப்படியான காரியாலத்தில் எனக்குப் பிடித்தது சில மனித உருவ மிருகங்களின் முகத்தில் படாமல் பணிபுரியும் நூலக வேலைதான்.
புத்தகங்களோடும் வாசகர்களோடும் வாழ்தல் அவ்வளவு மனத்திருப்தியானது.
சொந்தப் பணத்தையும் செலவு செய்து அலங்கரித்து வேலை செய்யும் அழவுக்கு நூலகத்தை நேசித்தேன்.
ஆனால் இவர்கள் பொது நூலகத்தில் புல்லுக் கொத்தி வெளிசாக்கவும், மேல்மாடி கழுவவும், புத்தகங்கள் ஒழுங்கு செய்யவும், நூலக அலங்காரத்துக்குமாகப் பயன்படுத்தி வேலை முடிந்து ஒரு நாள் கூட ஆகாது எங்கிருந்தோ தேடிப்பிடித்த தவரொன்றை வைத்து இடம்மாற்றி விடுவர்...
இவர்கள் ஆடும் பந்தாக நாங்கள் இருந்தாலும் இறைவன் இந்த ஹல்லாஜ் நூலகம் ஊடாக ஒரு படி உயர்த்தினான் என்னையும் சாஜித்தையும்.
நனசல நிறுவனம் வந்து நூலகத்துக்கு நான்கு கணணிகள் தந்து அதனை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வழிநடத்த தலைநகர் சினிக் கெம்பசியில் எட்டு நாட்கள் பயிற்சியும் தந்து சான்றிதழும் தந்தார்கள்.
சில நாட்கள் என்னை அந்தப்பிரிவிலும் நூல் பிரிவில் சாஜித்தையும் போட்டுவிட்டு மெதுவாக என்னை மாற்றிவிட்டார்கள்.
இடம் மாறினாலும் அடிக்கடி சென்று மேல் மாடியில் உள்ள கணணிகளைத் துடைத்து வைத்துவிட்டு வருவேன். யாரும் பாவிக்காமல் தூசு பிடித்து ஒட்டறை கட்டிக் கிடப்பதைப் பார்த்து மனது வலித்தவனாக இறங்கிவிடுவேன். சான்றிதழ் மட்டும் எங்களிடம் புழுதி படாமல் பாதுகாப்பாக உள்ளது சந்தோசம்.
சான்றிதழ் என்று சொன்னதும் இன்னுமொரு சம்பவம் ஞாபகம் வருகிறது அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.
சவுதி அரேபியாவில் இருக்கும்போது எனது சொந்தக் கம்பனியில் இருந்து பாய்ந்து வேறு இரு இடத்தில் வேலைசெய்தேன்.
(நம் விசாவில் பதிந்த கம்பனியில் வேலை செய்யாமல் இடையில் வேறு இடத்தில் ஒழிந்துகொண்டு வேலை செய்வதை பாய்ந்து வேலை செய்ற என்று சொல்வார்கள்)
அப்ப நானும் பாஞ்சி ஒரு கஹ்வா மஹால்ல (காப்பி சோப்) வேலை செய்தேன் அது ஒரு உயர் போலிஸ் அதிகாரியின் சொந்த இடமாக இருந்தும் நாடாத்துனர் மலையாளி ஒருவர் மற்றும் அங்கு பணி புரிபவர்களும் மலையாளிகள்.
நான் மட்டுந்தான் முஸ்லீமும் தமிழும்.
அங்கு எனக்கு உதவியாகவும் நட்பாகவும் றஜி சேட்டா இருந்தார் அவரும் நானும் தொடர்ந்து இரவுக் கடமை இன்னொருவர் இருந்தார் அவர் பகல் கடமை.
பெற்றோல் செட்,
பக்காலா=(சில்லறைக் கடை)
பக்கத்தில் எங்கள் கஹ்வா மஹால்.
அங்கு அமேரிகன் காப்பி, காப்பிச் சீனு, மோக்கா, மோக்காச் சீனு, மோக்கா பாரித், காப்பிச் சீனு பாரித், சாய் மஹ்ரிபி, சாய் நனா, கொப்பி லத்தே ஹார், லத்தே பாரித், போன்ற பல கோப்பிகள் இருந்தும் துர்க்கிஸ் காப்பியே பலரால் விரும்பி சாப்பிடப்படும் அதேபோலத்தான் இலைங்கைத் தேயிலையும்.
இந்த துர்கிஸ் காப்பி போடுவதர்க்கு ஒரு முறை இருக்கிறது தவறினால் சுவை கெட்டுவிடும்.
பிடி உள்ள மிகவும் சிறிய பாத்திரத்தில் துர்கிஸ் காப்பிப் பொடி ஒரு கரண்டி போட்டு சுடுதண்ணீர், சீனி தேவைக் கேற்ப.
அதிகம் தேவை என்றால் சுக்கர் சியாதா என்றும் கொஞ்சம் என்றால் சுக்கர் சோயா என்றும் அண்ணளவாக என்றால் நுஸ்னுஸ் என்று சொல்லிக் கேட்பார்கள்.
சரி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது கொதித்து வளிவதர்க்குள் இரக்கிவிட்டு. குடிக்கும் ஜக்கில் தளர்வு இல்லாமல் மெதுவாக.
அதாவது நுரைவராமல் பீரை ஊற்றுவார்களே அப்படி ஊற்றினால் மேலே ஒரு வெள்ளைப் படலம் வரும் அதுதான் துர்கிஸ் காப்பி.
எனது கைப் பக்குவச் சுவைக்கு சில அரபிகள் அடிமையாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக ஒரு முதியவர் வந்தால் இரண்டு மூன்று மணிநேரம் அமர்ந்து கொண்டு மூன்று நான்கு காப்பிகள் குடிப்பார் ஒன்றின் விலை ஐந்து றியால்.
ஆனால் அவர் வெளியேறும்போது என்னை பக்காலாவிற்கு அழைத்து நான் பாவித்த மொபைலி சிம்முக்குப் போட பத்து ரியால்ல ஒரு கார்ட், சாப்பிட சில பொருட்கள், அந்தநேரம் நான் புகைத்ததால் ஒரு பக்கட் சிகரட், செலவுக்குப் பத்து றியால் தந்துவிட்டுச் செல்வார் இந்த முதியவர்.
அவர் வந்தாலே எனக்குக் கொண்டாட்டம்தான்.
அதே போலத்தான் இன்னுமொருவர் வந்தார் பென்ஸ் காரில் ஒரு முத்தொவ்வா. அங்கு கடைக்குள் அமர்ந்து சாப்புடுவதை விட சபரி ( வாங்கிப் பயணத்தில் சாப்பிடுதல்)
சபரிதான் அதிகம் இந்த முதவ்வா காரில் இருந்துகொண்டு என்னை அழைத்து ஒரு காப்பிச் சீனு கேட்டார் நானும் போட்டுக் கொடுக்கும்போது 500 றியால் தந்தார் 5 றியாலுக்கு 500 றியாலா...?
ஓடிப்போய் பெற்றோல் செட்டில் நிண்ட பங்காளிக்கிட்ட மாத்தி மிச்சத்தக் கொடுக்கப் போனப்போ போன் பேசிக்கி இருந்தவர் ஒரு கையால் வாங்கி பக்கத்து சீட்டில் போட்டவர் தால் முஹம்மட் ( வா முஹம்மட்) அழைத்து இடது கையால் கொஞ்சப் பணத்தைக் கோரி அள்ளி தந்துவிட்டு அக்கீல் ( சாப்புடு) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இப்படிச் சுவாரஸ்யங்கள் இருந்த இடத்தில் ஒரு துக்கமும் இருந்தது. 2003.2004,2005 இந்த மூன்று வருடங்களும் நமது கலாச்சார நிலையத்தால் தலை நகருக்கு சாஹித்திய நடன நிகழ்விலும் பெரேகரா நிகழ்விலும் நடனத்தில் கலந்து பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் என்னிடம் ஒரு கவரில் இருந்தது. அதில் ஒன்று மஹிந்த பிரதமராக இருந்தபோது அவர் அதிதியாக வந்து. கிடைத்தது என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லை.
எனது பயணப் பையில் இருந்ததை நான் ஜித்தா போவதர்க்கு பொருட்களை ஒழுங்கு படுத்தும் போது வெளியில் வைத்துவிட்டு யாசிருடன் ஒரு வேலையாக வெளியில் போய் வந்து பார்த்தால் இல்லை.
பகல் நேரக் கடமை செய்த மலையாளிதான் இருந்தார். அவரிடம் போய் சேட்டா இவட செட்டிபிகட் கிடந்தது கண்டையலோ எண்டன்.
ஞான் அறியல்ல தூக்கி பலதியால போட்டன் எண்டான். சேட்டா பகடி பண்ணனாம் பலதியா எவடே என்று தேடிக் கிடைக்கல திரும்பவும் கேட்டன் ஞான் பகடி பண்ணல கேட்டோ பலதியால போட்டது நெசோ எண்டான்.
எனக்கு தமிழும் வரல்ல மலையாளமும் வரல்ல அரபாலதான்.
இந்தா ஹைவான் ஹராமி மொக் ஹரப் இந்தா...? இந்தா மொக் சீலு பர்ராஹ் சொவ்வி ஹரீக் உப்fபு. என்றுவிட்டு வந்திட்டன்.
நான் போரது பிடிக்காம இப்படிச் செய்தான் அந்த மலையாளி. விஜி செட்டாக்கிட்ட விடையத்தைச் சொல்லிட்டு ஜித்தா செல்ல பஸ்ஸுக்கு டைமாச்சு புறப்பட்டுவிட்டேன்.
நானும் சாஜித்தும் சினிக் கெம்பசில் இருந்து ஊர் வந்த கையோடு கரடியன் ஆறு போகவேண்டி ஏற்பட்டது.
சுவாட் நிறுவத்தில் பணிபுரியும் விஜி என்பவர் சாஜித் ஊடாக என்னைத் தொடர்பு கொண்டு கரடியனாறு பிரதேசத்தில் சிறிய ஆவணப் படம் எடுக்கவேண்டும் பொதுச் சேவைக்காக என்று எங்களை அழைத்தார் பதினைய்யாயிரம் தருவதாச்சொல்லி பத்தாயிரம்தான் தந்தார். ஆனால் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நீண்டது.
நீக்கவேண்டிய காட்சிகளை நீக்கிவிட்டு எடிட் செய்தாலும் நான்கு மணி நேரங்கள் வரும் அதை வைத்து அவர் எவ்வளவு சுறிட்டினாரோ தெரியாது...
NGO க்கள் இப்படியான வேலைகளுக்கு பதினைந்து நிமிடத்துக்கே ஒரு லெட்சம் தொடக்கம்
இரண்டு மூன்று லெட்சங்கள்வரை கொடுப்பார்கள். பறவாயில்லை ஆனால் இது மறக்கமுடியாத சம்பவமாக இருப்பதர்க்குக் காரணம் இந்தக் கரடியன் ஆறு மக்களின் அவலங்கள்தான்.சொல்கிறேன்.
#தொடரும்...gafrufais
Post Top Ad
Wednesday, 17 October 2018
அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர் தொடர் -15
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment