அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்.
தொடர்_12
முதலில் பசீர் அப்துல் கையும் சேர் அவர்களுக்கும் எஸ்.றபீக் சேர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் பாடலை முதலில் இவர்களின் அங்கீகாரத்தில் பிறை fmல் வெளியிட்டு என்னிடம் நேரடியாக நேர்காணல் செய்தார்கள்.
ஆம் அதே போலத்தான் எத்தனையோ பேர் என் வாழ்வில் உண்டு.
ஒருபுறம் என்னை பயன்படுத்தி தூக்கி எறிந்தவர்கள். மறுபுறம் என்னை உயர்த்த உன்மையாக உடல் உள உணர்வு ஆலோசனை என்று பல வகையிலும் எனக்கு உதவியவர்களும் உண்டு.....
அன்று நான் சவுதி அரேபியாவில் இருந்து வந்திறங்கி தைக்காநகர் இருந்து என் வீடு நோக்கி வந்து சேர்ந்தபோதிருந்தே...
எனக்கு ஆறுதலாக இருந்த எனது நண்பன் யாசீரின் உறவு என்னை மரியாதையாக தலைனிமிர்ந்து வாழவைத்தது ஊரில்.
அவன் நட்பு எனக்கு அந்த சவுதி மண்ணில் ஒரு தாயின், சகோதரனின், தந்தையின் இடத்தைப் பூர்த்திசெய்து கொண்டது.
முதல் முதலாக றியாத் பbத்தாஹ்வில் முழுவதும் சுற்றிப் பார்த்த களைப்பில் இலங்கை உணவகத்துக்கு முன் ஒரு இடத்தில் ஓய்வடுக்கும்போது என் பக்கத்தில் கொஞ்சம் தள்ளியிருக்கலாமா...?
ஆம் என்று சற்று தள்ளும்போதே நீங்க எவடம் நான் சிறீலங்கா நீங்க நானும்தான். நாட்டுல எவடம் கின்னியா நீங்க நான் அக்கரைப்பற்று ஆஹ் முப்பது நிமிடங்கள் உரையாடல்.
அன்று ஆரம்பித யாசீரின் நட்பு எனது கம்பனியை விட்டுப் பாய்ந்து ஒரு கோப்பி சோப்பில் வேலை செய்து பின் ஜித்தா போய் இடையில் தாஹிப்பில் வைத்து போலிஸால் பிடிபட்டு நான் நாடு வரையிலும் அவன் அரவணைப்பிலே இருந்தது மட்டும் அன்றி ஊரில் எனக்கு மாதம் ஒருமுறை நாப்பது ஆயிரமோ முப்பது ஆயிரமோ செலவுக்காக அனுப்பிவைப்பான் இந்த யாசிர்.
எதிர்காலத் திட்டமிடல் தொழில் வாழ்க்கை எல்லாம் ஒருமித்து ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும் என்று இருவரும் விரும்பினாலும் இன்று ஆளுக்கொரு திசை எங்களை இறைவன் வைத்தும் எங்கள் உறவும் அந்த நட்பும் இன்னும் இதயத்திலும் தொலைபேசியிலும் தொடர்வதற்கு நாடிய அந்த இறைவனுக்கே எனது நன்றிகள்.
என் வீட்டுக்கு முன்னால் சில இளைஞர்கள் கிரிக்கட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ஒரு மாலைப் பொழுது அது அஸ்கர், அப்ரத், ஹிஜாஸ், இஹ்சான், ரசா, ரஸ்மி என்று இன்னும் எத்தனையோ சிறுவர்களும் இளைஞர்களும்.
ஆனால் அதில் துடிப்பான ஒரு செயற்பாட்டாளனாக பஜ்ரிக் காக்காவின் மகன் சப்ராஸை இனம் கண்டேன்.
அன்று அவர்கள் எல்லோரையும் அழைத்து நாம ஒரு டீம் ஒன்ற ஆரம்பிப்போம் என்று அந்த இடத்திலேயே பெயர்கள் பதியப்பட்டு ஒரு கழகம் ஆரம்பித்தோம்.
Global sports club பின் பல நாட்கள் நண்பன் பெரோஸ் கானோடு இணைந்த எங்கள் உரையாடலில் global activity foundation என்ற பெயருடன் முதல் அறிமுகமாக ஒரு மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியை சஹ்றா பாடசாலை மைதானத்தில் வைத்தோம்.
ஒரு இளைஞ்ஞனால் இந்த வயதில் இப்படி வேகமாக வேலைசெய்ய முடியுமென்று சப்ராஸ் மூலமாகப் பார்த்தேன்.
அதில் என்னோடு இணைந்து அஸ்கி, டீன்ஸ்.ரிக்காஸ், இஸ்ஸத் அலி மற்றும் இன்னும் எத்தனையோ பேர் எக்களோடு கலந்து செயற்பட்டார்கள்.
அவ்வளவும் யாசீரின் பணத்தில் நடாத்தியும் கடைசியில் கப் வாங்கக் காசி இல்லாமல் எனது இரண்டு தொலைபேசியில் ஒன்றை விற்றுவிட்டு கப்வாங்கிக் கொடுக்க நிகழ்வைத் தயார்படுத்திவிட்டு நாங்க வாங்கின கப்பக் கொடுக்க அட்டாளைச்சேனை நக்பர் டொக்டர கெஸ்ட்டா கூப்புட அவர் அவர்ர வைப்f எ அனுப்ப அவர் வந்து கப் கொடுத்துவிட்டுப் போனாலும் வெற்றிபெற்ற அணியினர் றுபைஸ் காக்கா உங்குட கையால தாங்கோ எண்டு மீண்டும் என்னுடைய கையால் அந்தக் கப் கொடுக்கும்போது அவர்களின் சந்தோசம் என்னை இன்னும் உட்சாகப் படுத்தியது. மாஷா அல்லாஹ்.
ஆனால் அதற்குப் பிறகு என்னோடு தொடர்ந்தும் செயற்பட்ட அஸ்கியின் வாயால் நேருக்கு நேராக எனது முகத்திலேயே அமைப்பு செய்து நல்லா ஒழச்சி தனியச் சுறுட்டிட்டையல் என்று கேட்டு பின் எல்லாம் புரிந்து அவன் மனது வருந்தினாலும் என் மனது இன்னும் மறக்கவில்லை.
என்ன செய்வது மனிதன் அப்படித்தானே...
பிறகு தைக்காநகர் சஹ்ரா பாடசாலைக்கு அருகில் உள்ள ரியாத் மச்சாண்ட உம்மா உமுசல் மாமியின் வீட்டில் வாடகையும் இல்லாமல் அவர்களின் முழு ஒத்துழைப்பில் ஒரு ஆங்கில ஆரம்பப் படசாலையை நடாத்தினோம். அதில் அவருடைய மகள் ரஸ்கா டீச்சராக கடமையாற்றி இந்தப் பிராந்திய மாணவர்களுக்கு பல தியாகங்களைச் செய்திருந்தார்.
அந்தப் பாடசாலைக்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க கதுரை மேசை தேவைப்பட்டது.
சிலர் சொன்னார்கள் சபீஸ் சேர் உதவி செய்வார் என்று அவரிடம் போய்க் கேட்க மறு கதை இல்லாமல் ஜெலீல் காக்காக்கு கோல்ல சொல்லி உடன் வாங்கித் தந்தார்.
பின் அவரும் அந்த நேரம் எங்கள் ஆலோசகர் ரஸ்பி சேறும் அதிதிகளாக வந்தும்.
மாலையைக் கழட்டி எனக்குப் போட்டு இத்தனையும் செய்யும் நீங்கள்தான் இன்றைய அதிதி என்று என்னை அழைத்து வந்து ஆரம்பப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார் இந்த சபீஸ் சேர்.
அதன் பின் ஒரு தேர்தலுக்காக தலைவர் அதாவுல்லாஹ்வின் போஸ்ட்டர் ஒட்டும்படி என்னிடம் கேட்டு கொஞ்சப் போஸ்டரும் கோதுமை மாவும் அனுப்பிவைத்தார்.
ஆனால் என்னிடம் அப்போது போஸ்ட்டர் ஒட்டக்கூடிய இளைஞர்கள் இல்லை எல்லாம் படிக்கும் மாணவர்கள் என்ன என் தலையழுத்து இது என்று எண்ணிக்கொண்டு நானே ஒட்டிமுடித்தேன்.பின் அரசியல் சார்பானவர்களிடம் உதவி கேட்பதையே நிறுத்திவிட்டேன்...
எமது அடுத்த செயற்பாடாக ஒவ்வொரு பாடசாலைக்குமாக தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாகாண மட்டப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்காக ஒரு கல்விக் கருத்தரங்கு செய்ய ஆரம்பித்தோம் அதற்காக சில கடைகளுக்குப் போய் டொனேசனாக பணம் அறவிட்டோம் குறிப்பிட்ட சிறிய தொகை வந்தாலும் எனது சவுதி நண்பன் யாசீரின் பண உதவியும் அதில் கலந்திருந்தது....
றிக்காஸ், அப்துல்லா, இஸ்ஸத் அலி முபீன் என்று சில இளைஞர்களுடன் இந்த கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமாகவே எங்களால் செய்யப்பட்டது....
அதற்காக ஒவ்வொரு பாடசாலைகளும் எங்கள் நிறுவணத்தை வாழ்த்தி ஊக்குவித்து அவர்களுடைய லெட்டர்கேட்டில் பதிவுசெய்தும் தந்தார்கள்...
பின் அது அஸ்கியின் கையில் அகப்பட்டு என்னிடம் தராமல் சில உறுப்பினர்களின் கதைகேட்டு வைத்திருந்து பின் என்னால் மீளப்பெற்று இப்போது அனைத்து ஆவணங்களும் புகைப்படங்களும் என்னிடமே பாதுகாப்பாக உள்ளது.
நினைவுகளும் கூடவே....
அதையும் தாண்டி எனது செயற்பாட்டை முடக்கமுடியாமல் போனது சிலரால்...
மீண்டும் பிரோஸ்கானின் உதவியுடன் கொழும்பில் இருந்து வரவழைத்து ஆங்கில லெக்சர் மாமுன் றக்கீம் அவர்களால் அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
இதிலும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தும், மாணவர்கள் போதிய பயன் அடைந்தும் மாமுன் றக்கீம் சேறுக்கு இருவது ஆயிரம் கடனாளி ஆனேன்....
அந்த நேரம் அரங்கத்துக்கு நான்காயிரம் பிரதேசசபைகுக் கொடுத்துத்தான் நிகழ்வை ஆரம்பித்தோம். இப்படிக் கடன் வந்தபின் தவிசாளர் தவம் சேரிடம் போய்ச் சொல்ல அவர் மீண்டு எங்களிடம் அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிட்டார்..
அல்ஹம்துலில்லாஹ்
அவரைக் கௌரவித்து எங்கள் நிறுவணத்தின் நினைவுச் சின்னம் கொட்டுக்கப்பட்டது.
பிறகன்ன செய்வது கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் இல்லையா...? யாசீருக்கும் தொழில் சிக்கலாக அவனிடம் இருந்து வரும் பணமும் நிறுத்தப்பட்டது. எப்படியாவது கொடுக்கவேண்டும் என்பதர்க்காக வீடுகளுக்கு பெய்ண்ட் அடிக்கும் பெய்ண்டராக ஒரு அவதாரம் .
எனக்கு பல உதவிகள் செய்த எனது குருவாக நினைக்கும் டெஸ்க்கா மர்ஜூனின் மச்சாம் றஹீமின் வீட்டில் பெய்ண்ட் அடிக்கும்போது நான் சற்றும் எதிர்பாராத எனது நம்பிக்கையான நண்பர் ஒருவர் போலீஸ் சம்மனுடன் என்னை வெளியில் அழைதார்.
போய் என்ன எண்டு கேட்கச் சொன்னார் மாமும் றக்கீம் சேர் சொன்ன நீங்க காசு தராம ஏமாத்துறையலாம் அத்தான் போலீஸ்ல எண்டி போட்டு வாங்கித் தரச் சொன்னார் என்று... ஒரு போலீஸ் சம்னனை நீட்டினான்.
என்னிடம் இன்று கூட அந்த கருந்தரங்கில் பங்குகொண்டு பயன் கண்ட மாணவர்கள் அதனை நினைவு படுத்தி நன்றி கூறும்போது வருகின்ற புன்சிரிப்பின் அதே மாதிரி ஒன்றை அன்றும் அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு.
ரஹீம் நானாவிடம் விடையத்தைச் சொல்ல அவர் காசு தரக் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டின் மிகுதிப் பெய்ண்ட் வேலையைத் தொடர்ந்தேன்....
இத்தனை நடந்து சலித்துப்போகவில்லை நான்.
இந்த சமூகசேவை உணர்ச்சி அவ்வளவு போதையானது, அதிலும் கல்வி மாணவர்கள் என்று பயணிப்பது ஒருவகை இன்பமானதும் கூட.
பின் மீண்டு அதாவுல்லாஹ் அரங்கில் பல இளைஞர்களின் ஒத்துழைப்புடன் பரிட்சைத் திணைக்களத்தில் இருந்து கணிதப் பாட லெக்சர் றசாக் அவர்களை அழைத்து வந்து சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்கு வைத்தோம் இதுதான் கடன் இல்லாத கருத்தரங்கு.
சிலரின் தலையீடு இல்லாமல் நானும் நண்பன் பிரோஸ்கானும் அழகாகத் திட்டமிட்டுச் செய்தோம்...
அந்தக் காலத்தில்தான் நியாஸ் காக்கா கூட எங்களோடு சுற்றித்திரிந்தும் எனது தேர்தலின் பின் கட்சி நான் மாறியதோடு என்னை அவருக்குத் தெரியாது என்று மறந்துவிட்டார் ஆனாலும் அவர் நல்லமனிதர்....
மந்த கெதியில் இருந்த எனது பொருளாதாரத்தால் என்னால் முழுமையாக சமூக சேவையில் செயற்பட முடியாமல் இந்த வீடுகளுக்குப் பெய்ண்ட் பூசுதல், சித்திரம் கீறுதல், கடைகளுக்கு பெயர் எளுதுதல் என்று கொஞ்சக்காலம் பயணித்தேன்.
வேலையை முடித்துவிட்டு கூலியைக் கேட்டு கெஞ்சும்
கெஞ்சல் காலமாக இருந்தது அந்தக் காலம்..
நண்பன்ட பொண்டாட்டிக்கு பிள்ளை கிடைத்து வைதியசாலை இருந்து வீடு வருதற்குள் அவண்ட வீட்ட பெயிண்டுக்கு மட்டுமாலும் காசக்கொடுடா எண்டு சித்திரம் கீறிக்கொடுக்க அத அவன் தராம ஒளிச்சித் திரிய அசீஸ் ஹொட்டல்ட போbட் எழுதி சப்னா பெய்ண்ட் கடைல கடன் காசக் கொடுதது ஒருபுறம்.
பின் எனது சகோதரன் றபீக் தனது வீட்டுக்கு பெய்ண்ட் அடிக்க கொழும்பில் இருந்து கொண்டு வேலைய முடிச்சிட்டு பில்ல வைங்கோ வந்து தாறன் எண்டு கொன்றைக் தர நானும் செய்ய என்னில் உள்ள நம்பிக்கை விசுவாசத்தில் சம்சம் ஹாட்வெயார் இர்சாத் காக்கா ஐம்பது ஆயிரத்துக்கு மேல சாமான் தர சப்னா ஒரு ஐம்பது ஆயிரத்துக்கு மேல அதே விசுவாசத்தில் செக்கும் வாங்காமல் கடனுக்கு எனது வாக்கை நம்பிச் சாமான் தர நானும் சிலரை கூலிக்கு வைத்து வேலையும் முடியும் தறுவாயில் வந்திறங்கி முழுமையாக பணம் தராமல் றபீக் என்ன ஏமாத்த.
ஆஹா கூலியும் இல்லாமல் இரண்டு கடைகளுக்கும் கொடுக்கவேண்டிய பாக்கித் தொகைகளை ஒவ்வொரு இடத்திலும் கூலிக்கு பெய்ண்ட் அடித்துவிட்டு வரும்போது இந்தக் கடைகளுக்கு என்னுடைய சம்பழப் பணத்தை அப்படியே கொடுத்துவிட்டுத்தான் என் கறுத்த லுமாலா சைக்கிளில் வீடு வந்து பெய்ண்ட் பட்ட எனது ஆடையை கழைவேன்.
இப்படி எத்தனைபேர் என்னை ஏமாற்றினாலும் கடங்காறன் ஆக்கினாலும் என்னை நம்பி எனக்கு கடனாகப் பொருட்களை தந்த எந்தக் கடைக்காறருக்கும் நான் கொடுத்த வாக்கையும் நம்பிக்கையையும் சொன்ன நேரத்தில் திருப்பிக்கொடுத்து தக்கவைத்துக் கொண்டேன்.....
தொடரும்...
Post Top Ad
Tuesday, 9 October 2018
Home
Unlabelled
அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர். தொடர்_12
அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர். தொடர்_12
Share This
About maha
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment