#அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர்.
#தொடர்_07
மாலை ஐந்து மணி இருக்கும் பதுர்தீன் காக்கா எடிட் செய்துகொண்டு இருந்தார் எங்கள் மூவரையும் உள்ளே அழைத்து அமரும்படி சொல்ல அமர்ந்துகொண்டோம்.
அருமையாக பேசக்கூடியவர் பதுர்தீன் காக்கா பேச ஆரம்பித்தார்....
மலரே மௌனமா திரைப்பட வேலையில் இருக்கிறோம் பாதிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது அந்த எடிட்டிங்தான் செய்றன் வாங்களன் பக்கத்துல என்று கணணியின் திரைக்கு முன் எங்களை அழைத்து அமர வைத்துவிட்டுச் சொன்னார்.
இந்த எடிட்டிங் சாப்ட்வேர் இந்தியாவில் இருந்து நானும் எனது நண்பர் ஒருவரும் சேர்ந்து வாங்கினோம் கடும் வெல இதுக்கு என்று சில லெட்சத்தைச் சொல்லிவிட்டு. கணணி தொடக்கம் லைட்வரை அவர் சொன்ன விலைப்பட்டியலைப் பார்த்தால் ஒரு கோடியை நெருங்கிவிடுமோ என்று எண்ணவைத்தது.
ஆனால் அதே நேரம் அவரிடம் சாதாரண வீடியோ கமேரா ஒன்றும் ஒரு எச் டீ கமேரா ஒன்றும் இருந்தது. நான் பேச ஆரம்பித்தேன்.
காக்கா நாங்க ஒரு படம் எடுக்கவிருக்கோம் கதை தயாராகிவிட்டது காசும் சில லெச்சம் இருக்கு கமேரா இருந்தா எடுக்கலாம் உங்கட உதவி வேணும் பழைய கமேரா எண்டாலும் பரவால்ல தருவயலா எண்டன்.
ஓம் என்ன பிரச்சினை எடுங்களன் எண்டார். பாஹ் இவ்வளவு சீக்கிரம் கிடைத்த அவரின் சம்மதத்தின் சந்தோசத்தில் எப்பப்ப எடுக்கலாம் என்றேன்.
ஹா....கிழமையில் ஒரு நாளைக்கு எடுக்கலாம் மத்த நாள்ள நான் ஓடருக்கு போயிடுவன்.
பாடல் சூட்டிங்கும் போகுது என்றவுடன்.
அப்படியன்றால் நான் கமேராவைக் கொண்டுபோகும் நாட்களுக்கு வாடகையாக குறிப்பிட்ட சிறிய தொகைகள் தாறன் என்று சொல்லிவிட்டு...
நண்பர் நந்தனின் ஆதரவுடன் நடிகர் நடிகைகளைச் சேர்த்தோம். அதில் முக்கிய கதாபாத்திரமாக கல்முனை சர்மில் நடிக்க ஒத்துக்கொண்டார், வில்லனாக நடிக்க தம்பிக்காக்காவும் ஒத்துக்கொண்டுவிட்டார்.
முதல்கட்ட சூட்டிங் செய்வதற்கு எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கமேராவை எடுக்க வந்தோம்.
அன்று பதுர்தீன் காக்காக்கு ஓடர் இருந்தது.
சரி அடுத்த சனிக்கிழமை செய்வோம் என்று ஒத்திவைத்துவிட்டு மீண்டும் தயார்செய்தோம் ஆனால் நாங்கள் சூட்டிங் செய்ய ஏற்பாடு செய்யும் நாட்களில்தான் அவருக்கும் ஓடர் இருந்தது காலமும் பல மாதம் கழிந்தது....
அவருடைய சுபாவத்திலும், பேச்சிலும் கமேரா தரமாட்டார் என்பதைப் புரிந்த நான் சொந்தமாக வாங்குவோம் என்று தீர்மானித்து.
மூன்று லெட்சம் பணத்துடன் நானும் சாஜித்தும் கொழும்பு சென்று 700d, ஸ்டாண்ட், லைட், என்று தேவையான சிலதை வாங்கிவந்து.
முறாவோடை பார்க் கட்டிடத்தில் திரைப்பட அறிமுக விழாவை வைத்திருந்தோம்.
எமது அழைப்பை ஏற்று பதுர்தீன் காக்கா, சவாஹிர் காக்கா, சர்மில் சேர், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நடிகர்கள் என்று முழுமையான ஒரு நிகழ்வாகவும் திருப்திகரமாகவும் நடந்து முடிந்தது.
முதல் கட்டமாக வெள்ளோட்டப் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டுவிட்டு.
என்னுடைய பாடல் வரியிலும் இயக்கத்திலும் நடிப்பிலும் சாஜித் அவர்களின் ஒளிப்பதிவிலும் #வரலாற_மாத்தும்_எங்கள்_தமிழ்_சினிமா என்ற பாடலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஆதரவையும் தந்தது.
தொடர்ந்து நிதானமாகவும் பொறுமையாகவும் படப்பிடிப்பு வேலையும் நகர்ந்தது. அதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல் வந்தது அந்த நேரம் நண்பர் பிறௌஸ்கானின் ஆலோசனையுடன் தலைவர் அதாவுக்காகவும், எமது ஊரின் நலனுக்காகவும், ஒரு தெளிவுக்காகவும் #கருங்கொடியின்_உறங்காத_உண்மைகள் எனும் தலைப்பில் தலைவர் மூலம் வந்த அனைத்து அபிவிருத்திகளையும் படப்பிடிப்பு செய்தோம்.
என்னோடு உதவிக்காக இஜாஸ், ஜஹான், பிறௌஸ் மூவரும் வெயிலையும் உஷ்ணத்தையும் பொறுப்படுத்தாமல் இயங்கினார்கள். ஒவ்வொரு இடமாக முடித்துவிட்டு தைக்காநகர் நுழைவாயிலை படம்பிடிக்கும்போது சாஜிதும் சியானும் வந்தார்கள் எங்கயிருந்து சாஜித் என்று நான் கேட்டபோது கிழக்குவாசல் போய்வாரன் தலைவர்கிட்ட சொன்ன ஜீ இப்படி ஒரு டொக்கிமண்டரி செய்ரம் எண்டு.
ஏன் சாஜித் சொன்ன இப்பதிய முடிச்சிட்டு காட்டிருக்கலாம்டா.
அதுவும் ஒரு அரசியல்தான் என்றவாற நகர்ந்துவிட்டார்கள்.
வெயில் அதிகம் என்பதால் தாகம் எடுத்த உதவியாளர்களுக்கு சர்பத் வாங்கிக்கொடுத்து நானும் குடித்துவிட்டு நகர்ந்தோம்.
இப்படியாக ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்து இரவு பகலாகக் கண் முளித்து எடிட் செய்து சாஜித் அவர்கள் வசனம் எழுத அட்டாளைச்சேனை நண்பர் (பல்குரல்) றஜா அவர்களால் கமல்ஹாசனின் குரலால் ஒலிப்பதிவு செய்து முடித்துவிட்டு.
தேர்தலுக்கு ஒருநாள் முந்தி தலைவரின் கிழக்கு வாசலுக்கு லெப்பையும் எடுத்துக்குப் போய்.
ஒரு டொக்குமண்ட் செய்திருக்கன் பாருங்க சேர் வெளியிட்டா மக்களுக்கு ஒரு தெளிவு வரும் திரும்பும் வாக்குகளும் நமக்கே கிடைக்கும் சாத்தியமுண்டு ஒருமுறை பாருங்கள் என்று சொல்லிவிட்டு இருந்தான்.....
இருந்தான்.....
இருந்தான்.....
வாசலுக்கு வந்த வளி நாயாக இருந்தாலும் கல்லால் எறிந்து துரத்துவதர்க்கு திரும்புவார்கள்.
ஆனால் நம்பளக் கணக்கே எடுக்கிற மாதிரி இல்ல மெதுவா லெப்டொப்ப தூக்கிட்டு வந்திட்டன்.
தேர்தலும் முடிந்து தோல்வியும் கிடைத்தது.
பிறகு என்ன செய்வது என்று யோசித்துவிட்டு மக்கத்தார் வாப்பாக்கிட்ட காட்டுவோம் என்று என்னுடைய தொலைபேசியில் ஏற்றிக்கொண்டு போனோம்.
பார்த்த வாப்பா பூரித்துப்போய் இத ஏன் மகன் இந்த தேர்தலுக்கு வெளியிடல்ல...?
நான் தலைவருக்கிட்டயும் போனன் வாப்பா அவிய ஒத்தரும் கணக்கெடுக்கல்ல, CDஅடிச்சு ஒவ்வொரு வீடாகக் கொடுப்போம் என்று நினைச்சன் அதுவுன் நடக்கல்ல.
ஆஹ் வாப்பா ஜனாதிபதி தேர்தலில் தோல்விக்குப் பின் தலைவரின் லொதுக்கூட்டம் மர்கஸுக்குப் பின்னாள் ஏற்பாடு செய்திருந்தார்கள் அங்க திரையில போட சபீஸ் சேர்கிட்ட அனுமதி வாங்கிட்டு புரோஜக்டர் தேடியலைந்து கடைசியா சவாஹிர் காக்காட மகன் சஜிர்கிட்ட வாங்கிக் கொண்டுபோய் போட்டம்.
மாஷா அல்லாஹ் சனக்கூட்டம் அப்படியே மேடையை நெருங்கியது, உணர்ச்சிபூர்வமாகவும் இரிந்தது அந்த சந்தர்ப்பத்தில் தலைவர் வர நானும் நினைத்தேன் ஒரு பதினைந்து நிமிமிடம்தான இருக்கிறது தலைவரும் பார்ப்பார் என்று இல்லை அது நடப்பதர்க்குள் சபீஸ் சேர் ஓப் செய்துவிட்டு தலைவருக்கு உரையை வழங்கத் துவங்கிவிட்டார்.
நான் அந்த இடத்திலிருந்து வந்துவிட்டேன்...
ஆனால் சபீஸ் சேர்ர வீட்டயும் ஒரு தரம் போய் அவருக்கிட்ட இதக் காட்டி அவரும் பாத்திருக்கார்....
இதற்குப் பிறகாவது CD அடித்து ஒவ்வொரு வீடுகளுக்கும் கொடுத்தால் எதிர்கால அரசியலுக்கு நல்லது வாப்பா என்றவுடன்.
ஒடன தலைவரைத் தொடர்புகொண்டு விடையத்தைச் சொல்லிவிட்டுச் சொன்னார் நாளைக்கு வா மகன் அதாவுல்லாஹ் மகனும் வருது காட்டுவோம் என்று சொல்ல அடுத்தநாள் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டேன்.
வாப்பா என்னுடைய தொலைபேசியை வாங்கி தலைவரிடம் காட்ட அவசரத்தில் கொஞ்சமா பார்த்தவர் கிழக்குவாசலுக்கு வா மகன் பார்ப்போம் என்றார் நானும் சரி என்று அதற்கான முயற்சியிலும் பல நாட்கள் அலைந்து ஒருநாள் அமைந்தது.
நானும் நண்பர் அர்சூக்கும் சென்றிருந்தோம்.
லெப்டொப் கொண்டுபோய் போட்டுக்காட்டினோம் பார்த்த தலைவர் மகன் நீ இதக் காட்ட ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திக் கொண்டு வந்த என சா....ஹ் மிஸ்பண்ணிட்டம். சரி வெளியூர்களிலும் நமது சேவை இருக்கிறது அதையும் சேர்த்து வெளியிடுவோம் என்றார் நம்பிக்கையுடன் காத்திருந்தேன் நான்.
இப்படியே கிடப்பில் கிடந்த காத்திரிப்பு ஒரு புறம் இருக்க காரியாலயப் பணிகளும், போனும் நானும் படப்பிடிப்பும் தொடர்ந்தது.
அந்த நேரம்தான் ஏழைகளுக்கும் , கூலித் தொழிலாளர்கள்களுக்கும் கொடுக்க துவிச்சக்கர வண்டிகள் வந்து சபையின் கட்டுப்பாட்டில் அரங்கத்தில் இருந்தது...
#தொடரும்...Gafrufais
Post Top Ad
Friday, 24 August 2018
அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர் : தொடர்_07
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment