அதாவுல்லாஹ் சுய புத்திக்கு இயங்குகிறாரா இல்லை சிலரால் இயக்கப்படுகிறாரா....? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

அதாவுல்லாஹ் சுய புத்திக்கு இயங்குகிறாரா இல்லை சிலரால் இயக்கப்படுகிறாரா....?

அதாவுல்லாஹ் சுய புத்திக்கு இயங்குகிறாரா இல்லை சிலரால் இயக்கப்படுகிறாரா....?

தேகா கட்சி ஆரம்பித்து அதாவின் முதல் தேர்தல் காலப்பகுதியில் சமுகத்துக்காகவும் அதாவின் வெற்றிக்காகவும் இயங்கிய சிலர் இன்று கட்சியுடன் இல்லை....
ஏன்....?
அந்த நேரம் முகநூல் இப்போது போல இயங்கியிருந்தால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் யார் யார் என்று.

அதாவின் கணக்கெடுக்காத தனமா....?
இல்லை சிலரை அவர் உள்வாங்கியதால் விட்டுப் பிரிந்தார்களா....? தெரியாது.

அது ஒரு புறம் இருக்க....
#ஊர் உன்னோடுதான் என்றும்
#நன்றிக்கடன்  என்றும், அக்கரைப்பற்று ஊர் அதாவுக்கு ஆதரவாகத்தான் இருந்தது.
 சில மாற்றுக் கட்சிகளும் மாற்றுக்கருத்துவாதிகளும் உருவானதால் குறைந்த அளவு வாக்கின் விகிதம் குறைந்தது.....

ஆனால் எப்போது இந்தமுறை மாநகரசபை தேர்தலின் பின் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கான பதவிகள் வழங்கினாரோ அதைத் தொடர்ந்து பல விசுவாசிகளும், கட்சிக்காக இயங்கிய பலரும் எதிர்பலையை துவங்கிவிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களே இயங்கும்போது மேயர் பிரதி மேயர் தவிர்ந்த மத்த உறுப்பினர்கள் அடப்படுக்கிறார்களா என்றும் தெரியாது.

01. மேயர் பதவியை தன் குழந்தைக்கு கொடுத்தது குற்றமோ
02. பிரதியை அஸ்மிக்கு கொடுத்தது குற்றமோ
03. பொதுமக்களிடம் மசூறா கேட்காமல் தனது பாட்டில் முடிவெடுத்தது குற்றமோ
எது குற்றம் என்று தெரியவில்லை...

......இன்று 
Aathamlebbe baithullaah  வின் பதிவைப் பார்தேன் கட்சிக்காக  அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்யும் இப்படியான போராளிகளுக்கு ஏன் மனக்கசப்பு ஏற்படுகின்றது....?

பிறந்த குலத்தை விட சுற்றுச் சூழல் வலிமை வாய்ந்தது என்பார்கள்...

அதேபோல தற்காலத்தில் அதாவையும் மகன் சக்கியையும் சுற்றியிருப்பவர்கள் யார்.....
இவர்கள் தேர்தல் காலங்களில் இயங்கினார்கள், செலவு செய்தார்கள் என்பதர்க்காக தூக்கித் தலையில் வைப்பதா....?
உறவு என்று காட்டக்கூடியவர்களா அவர்கள்....?

முகநூல் பக்கம் நிறைய ஆதரவாளர்கள் அதிர்ப்தியில் இருப்பது தலைவருக்குத் தெரியுமா....?

அவர்களைத் தொடர்புகொண்டு பேச முடியாதா அவரால்....?

அவர் முகநூல் பார்ப்பதில்லை என்றால் எல்லா ஆதரவாளனையும் கட்சிக்கு எதிரானவனாக  சித்தரித்து கட்சியோடு வெறுப்பை உண்டாக்குறானே ஒருவன். அவனைப் பற்றி யாராலும் தலைவரிடம்  சொல்ல முடியாதா....
இயங்குதலின் கலை தெரிந்த சாஜித் Sajeeth Ahamed உங்களாலும் முடியாதா...?

அதாவின் குழந்தை சகி முகநூலில்  இருக்கார்தான  அவராலும் வாப்பாக்கிட்டச்  சொல்லமுடியாதா....?

இது நீடித்தால் இன்னும் வாக்குச் சரிவு ஏற்படும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.

எங்களுக்கு அதா வேண்டும்.....
தேகா கட்சியும் வேண்டும்...
விசுவாசம் தொடருமானால் மாற்றம் வேண்டும். நன்றி....
Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages