ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டி: ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து வெற்றி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 15 January 2018

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டி: ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image result for ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டி: ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து வெற்றி

மெல்போர்ன்:
அதன்பின் பிஞ்ச்-உடன் மிச்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவித்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். டிராவிஸ் ஹெட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் சதம் அடித்தார். அவர் 107 ரன்களில் மோயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாயின்ஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பெய்ன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் லியாம் பிளங்கீட் 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும், மோயின் அலி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த கோடி எளிதில் 50 ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 53 ஆக இருக்கும்போது, பேர்ஸ்டோவ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய ஹேல்ஸ் விரைவில் அவுட்டானார். 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். முதலில் நிதானமாக விளையாடிய ஜேசன் ராய் 
தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோரூட்டும் அவருக்கு பக்கபலமாக நின்றார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

ஜேசன் ராய் 151 பந்துகளில் 5 சிக்சர்கள், 16 பவுண்டரிகளுடன் 180 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜேசன் ராய் - ஜோ ரூட் ஜோடி 223 ரன்கள் எடுத்தது.

அதன்பின் ஜோ ரூட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 91 ரன்களுடனும், மொயின் அலி 5 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. 

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 23 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages