பிரதமர் மோடியை கேலி செய்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளதற்கு எதிப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடியை கேலி செய்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளதற்கு எதிப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போதும் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை கேலி, கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரபலமான உலக தலைவர்களில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதை பாராட்ட மனமில்லாத காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பக்குவமின்மை வெளிப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிறது என காட்டமாக விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment