அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். தொடர் 16 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 23 October 2018

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர். தொடர் 16

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளர்.
தொடர் 16


வாருங்கள்....
கரடியன் ஆறு செல்வோம்.
பஸ்ஸில் இருந்து இறங்கினோம் நாங்கள் இறங்கிய இடத்தில் இருந்து கரடியன் ஆறு செல்ல அந்த நேரம் பஸ் இல்லை இரவுப் பொழுது.

எங்களை பிக்கப் ஒன்றில் விஜி ஏற்றிச் சென்றார் சுமார் ஆறு அல்லது ஏழு கிலோமீட்டர் இருக்கும்.வீதி முழுக்க இருள். யாரும் இல்லை இருபுறமும் காடு பிக்காப்பின் லைட் வெளிச்சம் மட்டுமே வீதியின் வளைவு நெளிவுகளைக் காட்டியது.

விஜி பேச ஆரம்பித்தார்....
இந்த வீதியில்தான் எத்தனையோ பேர் கொல்லப்பட்டனர். ஆவிகளின் நடமாட்டமும் அதிகமாம். வீதியால் வருபவர்களை வழிமறித்து பேய்கள் அடித்துவிடுமாம். அவரும் ஒருமுறை பேய் ஒன்றைக் கண்டதாகவும் சொன்னார்.
கரண்ட் இல்லாட்டி டொய்லட் போகப் பயப்புட்டு மூத்துரத்த அடக்கிட்டுப் படுக்கிற  நம்மள வச்சுக்கு இந்தக்கத சொன்னா தாங்குமா இதயம்....? அண்ணா கடவுளுக்காக நித்தாட்டுங்கோ பேக்கதயா அப்புறமாப் பேசுவோம் எண்டு....
வேறு கதைகளுடன் நுழைகிறோம் கரடியன் ஆறுக்குள்.

மாட்டெரு, வைக்கோல், இலைகளை ஒன்றாய்ச் சேர்த்து பற்றவைத்த புகை மணமும். பேய்மாங்காய்க் கறி மணமும் ஒன்றாய்ச் சேர்ந்து எங்களை வரவேறது.
சுவாட் காரியாலயம் வந்துவிட்டது இராப் போசனம் உண்டுவிட்டு சில உரையாடல்களோடு உறங்கிவிட்டோம்.

காலையில் ஒளிப்பதிவுக்காக வெளியே செல்லத் தயாறாகிப் புறப்பட்ட நாங்கள். வாகனச் சாரதி தயாறாகுமட்டும் வீதிக்கி நகர்ந்தோம்.
சுவாட் காரியாலயச் சுவரோடு பாடசாலைச் சுவர். சிதைவடைந்த வகுப்பறைக் கட்டிடங்களும், பாடசாலை மதிலும். மெதுவாக வலது புறம் நகர்ந்தோம்.

என்ன அழகு பாடசாலை செல்லும் குழந்தைகள்.....
எந்த அழுக்குகளும் இல்லாத வெண்மையான சீருடைகளுடன் வீதியின் ஓரமாக சீராக நடந்துவரும் அழகே தனியழகு.
ரசித்தவனாக எனது கமராவில் சில குழந்தை மாணவிகளைப் புகைப்படம் எடுத்தேன் அப்போது வெட்கத்தில் சேர்த்துக்கொண்டு தன் அக்காவுக்குப் பின்னால் ஒழிந்த அந்த முகம் இன்னும் என் கண்களில் நீங்காமல் இருக்கிறது.
சற்றுத் தொலைவில் இருக்கும் மாணவர்கள் பேருந்தில் வந்திறங்குவதையும் பார்த்துக்கொண்டு நகர்ந்த நாங்கள் ஒரு தேனீர் கடைக்கு அருகில் சென்றோம்.

பத்து நிமிடங்கள் ஒயாமல் மழை பெய்தால் கடைக்குள் பெய்துவிடும் மழை. கறுத்துப்போன கூரைக் கிடுகுகள் பல மழைக்காலங்களைக் கண்டிருக்கும் போல.
தலையை நிமிர்திப் பார்த்துவிட்டு வல்து காதை நிலத்தில் வைத்து புதைக்கப்பட்ட சடலங்களின் ஓலங்களைக் கேடுறங்கும் செவலை நாய் ஒன்று, வொறகு கொத்தும் பாட்டி, கடையை இரண்டாகப் பிரித்த பாதியில் உறங்கி அப்போதுதான் விழித்தெழுத்து கண்ணைக் கசக்கிக்கொண்டு வரும் பிறந்த மேனியுடன் ஒரு ஆண் குழந்தை,

நன்னாரி மணக்க முன் கொள்ளி அடுப்பில் கொதிக்கும் தேனீர், கூடவே ஆவி பறக்கும் வண்டப்பம்.
ஆளுக்கொரு வண்டப்பமும், தேனீரும் பருகிக்கொண்டு பல கோணங்களில் அந்த செவலை நாயைப் புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பும்போதே வந்துவிட்டது பிக்காப். ஏறினோம். செல்கிறது.

மீண்டும் காடுகளுக்குள்ளும், மலை ஒரங்களாலும், வற்றிய குளங்களின் அருகாலும், மேய்ச்சல் தரைகளிலும் பிக்காப் போய் ஒரு இடத்தில் நின்றது.
இங்கு ஒருவர் இருக்கிறார் முதலில் அவரை பேட்டி எடுத்துவிட்டுச் செல்வோம் என்றார் விஜி சரி என்று கமரா ஸ்டாண்ட செட்பண்ணி எடுத்து நானும் சாஜித்தும் தொழில் தூக்கி வச்சுக்கு நடக்கம். ஒருவர் பேசிக்கொண்டு பால் கறக்கிறார் நாங்களும் பாத்தம் இன்னொருவரும் இருக்காராக்கும் எண்டு.

அவர் மாடுகளுடன் பேசுகிறார் அதுவும் இவரின் கட்டளைகளுக்கேற்ப நகர்கிறது.
இதில் நகைச்சுவை என்னண்டா...
மஹிந்த மஹிந்த எண்டார் கவணைக்க இருந்து ஒரு மாடு வந்தது பாலக் கறந்தார், பின் சந்திரிக்கா சந்திரிக்கா என்றார் இன்னொரு மாடு வந்தது பாலைக் கறந்தார் இப்படி எல்லாமாடுகளுக்கும் பெயர் வைத்தே அழைக்கிறார்கள்.

அவரின் உரையாடலில் இன்னும் ஒன்றை அறிந்தோம். ஊருக்குள் தண்ணீர் வற்றிப்போனால், மேய்ச்சல் தரையில் புற்கள் காய்ந்து வறண்டு போனால் மேய்ச்சலுக்காக மாடுகளை காடுகளுக்குள் அனுப்புவார்களாம். மனிதர்கள் கூடவே போகாமல் அதர்க்கென்று தயார் செய்யப்பட்ட இரண்டு மாடுகளை பிணைத்து ஒரு பட்டி மாடுகளை அதன் பின்னால் அனுப்புவார்களாம். பத்து அல்லது இருவது நாட்களும், ஏன் மாதங்களும் போகுமாம் மாடுகள் திரும்பிவர. பிணைத்த வழிகாட்டும் மாடுகள் உரிய இடத்துக்கு மாடுகளைக் கொண்டுவந்து சேர்க்குமாம்.

சில வேளைகளில் காடு வெள்ளம் மாடுகளை அடித்துச் செல்லுமாம், புலி சிங்கம், மனிதச் சிங்கங்களின் வேட்டையிலும் சில மாடுகள் சிக்கிக் கொள்ளுமாம். ஏன் ஒருமுறை இந்தப் பொணச்சல் மாட்டுல ஒண்டு காட்டுக்க செத்தத மத்த மாடு இழுத்துக்கே வந்து சேந்திச்சாம். 
என்று மாடுகளை மிருகங்களாகப் பார்க்காமல் உறவுகளாகவே பார்க்கும் பண்ணைத் தொழிலாளர்களின் பேச்சிலும். அந்தப் பிரதேசத்தின் எழிலிலும் மூன்று நாள் போனதே தெரியல்ல எங்களுக்கு.

கடைசண்டு ராவுதான் சொன்னார் விஜி நாங்கள் தங்கிய இடம் பழைய றாணுவ வைத்தியசாலையாம். அங்கு பல இறந்துபோன சவங்களை இருந்ததாகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உடல்கள் இந்த வைத்தியசாலையில் இருந்து இறந்துபோனதாகவும். யுத்தம் முடிந்த பின் கைவிடப்பட்ட கட்டிடத்தை சுவாட் நிறுவனம் பெற்று காரியாலயம் வைத்திருப்பதாகச்சொலி இன்னும் பல உரையாடல்களுடன். நாங்கள் பதிவுசெய்த காட்சிகளைக் கணணியில் பிரதியடுத்தொ பார்த்துவிட்டு படுக்கைக்குப் போனோம்.

எங்க தூக்கம் வாற நாங்க பாத்த எல்லாப் பேய்ப்படங்களும் அண்டுத்தான் நினைவுக்கு வந்தது ஆளாளுக்கு எங்கள் பயத்தை மறைத்தாலும் சாஜித்தின் பேச்டில் சிரித்துக்கொண்டே விடிந்துவிட்டது அன்றிரவுப் பொழுது இறுதிநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு புறப்பட்டோம்.

யுத்த காலத்தில் இரத்த ஆறு பெருக்கெடுத்த பிரதேசம் அது. இன்னும் அதன் வடுக்களும் நடுக்கமும் அங்கு வாழ்கின்ற மக்களின் உள்ளங்களில் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. 

சில ஏழை முஸ்லிம்களும், முஸ்லிம் பணக்காரர்களும், ஏழைத் தமிழர்களும் பணக்காரத் தமிழரும் என்று கலப்பில் பின்னிப் பிணைந்த ஒரு பிரதேசமாக இருக்கும் இப் பிரதேசத்தில் அவர்கள் தொழிலாக பெரும்பாலும் மாடு வளர்ப்பு, ஆடு, கோழி என்று பண்ணைத் தொழிலிலேயே காலம் கடத்தி வாழ்கின்றனர்.

ஆனால் பல ஏழை மேய்ப்பாளர்களை நாங்கள் நேர்காணல் செய்தோம்.

 கமெராவுக்கு பின்னால் இருந்த எங்கள் கண்களில் கண்ணீர் மட்டுந்தான் வந்தது. இதயம் கனத்தும் விட்டது.
ஒருவருக்கு நூறு இன்னொருவருக்கு இருநூறு இன்னொருவருக்கு ஐநூறு என்று ஒவ்வொருவரும் அதிகளவு மாடுகளை வைத்திருந்தும் சில பணக்காரர்களிடம் பெற்ற கடனுக்காக அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் மாடுகளை மேய்த்து பால் கொடுத்துக் கடன் தீர்க்கிறார்கள்.

ஐயோ ஒரு மாட்டை விற்றால் இந்தக் கடன் தீருமே என்று சொன்னோம். இல்லை அப்படிச் செய்யமுடியாது எங்களை விக்க விடமாட்டார்கள். இவர்களுக்கும் ராணுவத்துக்கும் நெருக்கம் இருக்கிறது எஞ்சியிருக்கும் மிகுதி உயிர்களையாவது பாதுகாப்போம் என்று இருக்கிறோம். இழந்தது போதும் என்று அவர்களும் அழ நாங்களும் அழுதுவிட்டோம்.

இது மட்டுமா பதினைந்து வயது பையன் இவனும் மாடு மேய்த்துக் கொண்டு வந்தான் அவனிடமும் கேட்டோம்.
அன்னா போற முன்னூறு மாடும் எங்குடான் மேச்சி பால் வித்து வாற காசில அக்காக்கு வீடு கட்டி முடிச்சுக் கொடுக்கனும். தங்கச்சி படிக்கிது அதையும் கரையேத்தனும் எண்டான் அடே தம்பி உங்களுடைய சொந்த மாடுகள் இத்தனையும் என்றால் ஏண்டா சிலத வித்துப்போடு வீட்டக் கட்டலாம்தானடா இந்தக் காட்டுல இரவும் பகலும் ஏன் கஷ்ட்டப்பர்ராய் என்ற கேள்விக்கும் அதேதான் பதில்.
விக்க விடமாட்டார்கள்.

இவர்களை கடனாளியாக வைத்துக் கொண்டு தாங்கள் முதலாளியாக சொகுசு வாழ்க்கை வாழும் நமது முஸ்லிம்களும் சிலர் அங்கு உண்டு.

பட்டப் பகலில் இராணுவ சீருடையுடன் வாகனத்தில் வந்து மாடுகளை ஏற்றிச் செல்வார்களாம். இது சம்மந்தமாக யாரிடமும் போகமுடியாதாம் ஏன் போலிஸ்காரர்களும் அவ்வாறுதானாம். பெரிய போலிஸ்மா வரைக்கும் தொடர்பு உண்டாம் உயிர் பயத்தால் பல நூறு மாடுகள் சொந்தமாக சொத்தாக இருந்தும் கடனாளியாகவும் மேய்ப்பாளனாகவும் வாழும் இந்த மக்களின் ஒரு விடிவுக்காக இந்த ஒளிப்பதிவைச் செய்ததில் பூரண திருப்தி எனக்கு.
பிறகு என்ன நடந்ததோ தெரியாது...
ஆவணம் வெளிவந்ததா இல்லையா என்றும் தெரியாது.

அந்தக் காலகட்டம் பயணத்திலேயே போய்விட்டது. கரடியன் ஆறு இருந்து வந்திறங்கி சில நாட்களில் மீண்டும் சாஜீத்தின் நிறம் பூசும் குழந்தைகள் நூலும் வெளிவந்த காலமும் அது என்பதால் தலைநகர் செல்லவேண்டி ஏற்பட்டது.

வசந்தம் தொலைக்காட்சியில் தூவானம் நிகழ்வில் சாஜித் அவர்களின் நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அந்த அறையில் பார்வையாளனாக நான் மட்டும் இருந்து பார்த்தது ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. பிறகு அடுத்த வாரம் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

அந்தப் பயணத்தில்தான் கவிஞர் அஸ்மின்,நாகபூசனி, கவிஞர் நுஸ்ரி, ......கதாநாயகி போன்றோரின் நட்பும் கிடைத்தது இதுபோலத்தான் சாஜித்துடனான இலக்கியப் பயணத்தில்.
ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாறுக், முபீத், அலரி, விஜிலி, என்று பலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் இலக்கிய உறவுகளின் நட்பும் கிடைத்தது.

திரைபடத் துறையால் பல நட்புகள் இருந்தும் சிலர்....ஜெய்னி காக்கா, இயக்குனர் ஹசீன், மியாத், றியாஸ் குரானா, பௌஸ் சேர்,
இப்படியான நட்புகளின் பெயர்களோடு எனது நண்பர்கள் சிலரையும் பகிந்துவிட்டுக் கடந்து செல்கிறேன்.
பாடசாலைக் கால நண்பர்கள் என்று நப்றான் அலி, முபஸ்சிர்,  றிஸ்லி, சலீத், பர்சாத் என்று சிலர் என்னோடு நெருக்கமாகப் பழகினாலும். 

பின் அப்துல்லாஹ், இஸ்திகான், பர்ஹான், அஸ்லம், றஜா, ஹமீட், மனாசிர், சாஜித், முஸாப் என்று ஒரு கலகலப்பான நட்புகளோடு சிலகாலம் பயணித்தாலும் இந்த முஸாபைப் பற்றி ஒன்றை இந்த இடத்தில் சொல்வது நன்று.

நான் படிப்புக் கள்ளி என்ற பெயரில் மாணவர்களுக்கான ஒரு உளவியல் நூலை எழுதியிருந்தேன். அது வெறும் இருபது பக்கங்கள்தான் இருந்தும் என்னால் வெளியிடப் பணம் இல்லை.
முன்னூறு பிரதிகள் செய்ய ஐயாயிரம் போதுமாக இருந்தும் அதர்க்காக பணம் சேகரிக்க அப்பப்போ வரும் சித்திரம் வரைதல், கடைக்கு பெயர் வரைதல் போன்ற வேலைகளை செய்யப் போவதர்க்கு வாகனம் என்னிடம் இல்லாத நிலையில் இவர் தன் சொந்தத் தொழிலையும் விட்டுவிட்டு என்னை ஏற்றிச் சென்று வேலை இட்த்தில் விட்டுவிட்டு முடியும்வரை இருந்து பின் எனோடே வருவார்.

ஜப்பார் ஹொட்டல், மின்னாஹ் கோல்ட் ஹவுஸ் முடித்துவிட்டு கடைசியாக ஆயிசா பெண்கள் பாடசாலை என்று பெய்ண்டிங் வேலை செய்து வந்த பணத்தில் நூலையும் செய்து அதை மாணவர்களுக்கு இலவசமாகவே கொடுத்தோம்.
 இந்த நூலுக்காக முஸ்னத் சருபுதீன் ஆசிரியர் உரை எழுதியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

பிறகு பானிம், சஜிர், றிகாஸ், றிசான், சியாத்,சாஜித், சிபான்,றுமைஸ்,வாஜித் என்று சில நண்பர்கள்.

தோழர் யாக்கூப் தனித்துவமான நண்பர் எனது கஷ்டங்களில் ஒன்றனக் கலந்தவன்.
அதேபோல றுபாஸ் நட்புக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பன் இவன்.

நண்பர் சாஜித் ஊடாக பசால், சியான்,  இப்படி வயதல்லை இல்லாமல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தும் எனது gaf அமைப்பின் ஊடாக நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான உறவுகள் கிடைத்திருந்தது மாஷா அல்லாஹ்.

அதிலும் gaf இன் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை என்னோடும் அமைப்போடும் பயணிக்கும் நண்பர் சப்னாஸ் என்னைப் போல் ஒருவன். அவருடைய தம்பி முபாரிஸ்,சாஜித்,  இவர்களைப் போல  முக்கியமானவர்கள் நிறைய இருந்தாலும்
இப்படியே எல்லாப் பெயர்களையும் சொல்லமுடியாது அனைவரையும் நினைத்தவனாக. கிண்ணியா ஆசாதின் பெயரையும் பதிகிறேன்.

அடுத்தபக்கம் வாருங்கள்....
கிசாம்பிளி இலையுடன் ஒரு சிறுமியின் இரவுக்காவல்....
#தொடரும்....Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages