துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை..! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை..!

Related image
வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து  துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு.
ஜுமுஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அந்த நேரம் சம்பந்தமாக ஜுமுஆ தொழுகையில் துஆ கேட்பது போல் அன்றைய தினத்தின் அஸருக்குப் பின் கடைசி நேரத்தில் (மஃரிப் பாங்கு சொல்வதற்கு முன்) துஆ கேட்பதைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரம் சம்பந்தமாக இரு அறிவிப்புகள் வந்துள்ளதால் இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் அதை அடையலாம்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 886
—————-
அனைத்து நேரங்களிலும் துஆ கேட்கலாம் என்றிருந்தாலும், சில நேரங்களில் கேட்கப்படும் துஆக்கள் இறைவனால் உடனடியாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன, அது போன்ற வேளைகளில் நம் துஆக்களை அதிகமதிகமாக கேட்க வேண்டும், அத்தகைய சந்தர்ப்பங்களை நழுவ விடக் கூடாது.
“ஓர் அடியார் (தொழுகையில்) ஸஜ்தாவில் இருக்கும்போது தம் இறைவனிடம் அதிக நெருக்கமாக இருக்கிறார்.
எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 749
‘வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை‘ என்று அபுல்காசிம் [நபி (ஸல்)] அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6400
—————-
“சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் (இரவையும் மூன்றாகப் பிரித்து,) இரவின் மூன்றாவது பகுதியான இரவின் கடைசி வேளையில், கீழ் வானிற்கு இறங்கி, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6321

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages