புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
புவனேஷ்வர்:
புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே, சுற்றுலா பயணிகளாக வரும் சிலர் தங்களிடம் இருக்கும் மொபைல் போன் கேமராவில் கோவிலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என கோவில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1 முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கொண்டு வரும் பக்தர்களிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். போலீசாரும், கோவில் காவலர்களும் சோதனை நடத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment