ஓபேரா பிரவுசர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

ஓபேரா பிரவுசர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபேரா மினி மற்றும் ஓபேரா பிரவுசர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஓபேரா நியூஸ் ரீடர்

புதுடெல்லி:


ஒபேரா சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நவம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 10 கோடியை கடந்துள்ளது. ஓபேரா மினி மற்றும் ஓபேரா பிரவுசர் சேவைகளை வழங்கி வரும் ஓபேரா விரைவில் செய்தி மற்றும் தரவுகளை வழங்குவதற்கென பிரத்யேக செயலியை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.



ஒபேரா வெளியிட இருக்கும் புதிய சேவைகள் செய்திகள் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஓபேராவின் சொந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்குகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு இன்ஜின் வாடிக்கையாளர்கள் அதிகம் வாசிக்கும் தரவுகளை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு விருப்பமான செய்திகளை வழங்கும். 

Image result for opera

இதன் மூலம் செய்திகள் மற்றும் இதர தகவல்களை மிக வேகமாக பெறுவதோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற முடியும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஓபேரா மினி பிரவுசர் அந்நிறுவனத்திற்கு 50% வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக ஓபேரா தெரிவித்துள்ளது. 


நவம்பர் மாத நிலவரப்படி ஓபேரா பிரவுசரில் வாடிக்கையாளர்கள் தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் தினசரி அடிப்படையில் சராசரியாத 65 முதல் 81 செய்திகளை வாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல் வழங்குவோரும் அதிகப்படியான தகவல்களை ஓபேராவில் வழங்க முடியும். 



தற்சமயம் வரை 800க்கும் அதிகமான வலைத்தளம் மற்றும் பதிப்பக நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. ஓபேரா ஹபாரி செயலியும் ஓபேரா பிரவுசர் போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யம் மற்றும் வித்தியாச தகவல்களை வழங்க வணிக ரீதியாக 800க்கும் அதிகமான வலைத்தளங்கள் மற்றும் பதிப்பகங்களுடன் இணைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages