கட்டக் நகரில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் குவித்துள்ளது. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

கட்டக் நகரில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் குவித்துள்ளது.


முதல் டி-20: லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டம் - இந்தியா 180 ரன்கள் குவிப்பு

புபனேஷ்வர்:

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5-வது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.

ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசிய பிரதீப் ஷ்ரேயாசை அவுட் ஆக்கினார். 24 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப ட்தோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15-வது ஓவரில் 61 ரன்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் அவுட் ஆனார்.

இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது. இதனையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages