ஹூவாய் நிறுவனத்தின் மேட்புக் டி நோட்புக் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிஹூவாய் நிறுவனத்தின் மேட்புக் டி நோட்புக் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முகம் செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்: சீன மின்சாதனம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் மேட்புக் டி நோட்புக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள புதிய நோட்புக் டி (2018) 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட GPU கொண்டுள்ளது.
ஹூவாய் மேட்புக் டி (2018) சிறப்பம்சங்கள்:
- 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5, i7 பிராசஸர் மற்றும் பிரத்யேக Nvidia GeForce MX150 வழங்கப்பட்டுள்ளது. இதன் GPU முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஹூவாய் நோட்புக் மூன்று மாடல்கள் - விலை குறைந்த மாடல் இன்டெல் கோர் i5-8250U பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி., Nvidia GeForce MX150 GPU கொண்ட மாடல் CNY 5,188 அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மாடல் இன்டெல் கோர் i5-8250U சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி. மற்றும் அதே GPU கொண்ட மாடல் CNY 5,488 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் மாடல் மேட்புக் 2018 இன்டெல் கோர் i7-8550U பிராசஸர், 8 ஜிபி மெமரி, 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி, Nvidia GeForce MX150 கிராஃபிக்ஸ் கார்டு கொண்ட மாடல் CNY 6,688 அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேட்புக் டி மாடலில் 43.3Wh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி முழுமையான சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 10 மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் டால்பி பானரோமிக் ஸ்பீக்கர் சிஸ்டம், இரண்டு யு.எஸ்.பி. 3.0 போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் யு.எஸ்.பி. 2.0 போர்ட் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment