உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 23 December 2017

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது. மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன் முதலாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1954-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.
உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது.

மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன் முதலாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1954-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கின * 1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர். * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய ராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது. * 1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. * 1948 - பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

* 1958 - டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம் திறக்கப்பட்டது. * 1972 - நிகராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000-க்கு மேற்பட்டோர் இறந்தனர். * 1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர். * 1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.

* 1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது. * 1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். * 2004 - தெற்குப் பெருங்கடலில் உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. * 2005 - அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொறுங்கியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். * 2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages