பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்


கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. 
ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப் பொருளிலில், கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதன்பொருட்டு, பாடசாலை மாணவர்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியை கொண்டு குறித்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து, 40,000க்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டன. 
அவற்றில் 4000 போத்தல்களில் மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவுக்கு முன், இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்தப் போட்டியில், கிளிநொச்சி பூநகரி சாமிபுலம் அ.த.க.பாடசாலை முதலாம் இடத்தையும், பூநகரி மட்டுவில் நாடு அ.த.க.பாடசாலை இரண்டாம் இடத்தையும், பளை அல்லிப்பளை பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு, முறையே 7000 ரூபா, 5000 ரூபா, 3000 ரூபா பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். 
இதேவேளை, பாடசாலைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவின் இந்த செயற்பாடு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சூழலிலிருந்து அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்மாதிரியான ஒன்று எனவும், சாதாரணமாக சிறிய அளவு அறிவிக்கப்பட்ட இதுபோன்ற போட்டிக்கு 40 ஆயிரம் கழிவுப் போத்தல்களை சேகரிக்க முடியும் என்றால், ஒரு நிகழ்வாக திணைக்களம் இதனை மேற்கொள்ளும் போது, சுற்றுப்புறச் சூழலிலிருந்து அதிகளவு பிளாஸ்ரிக் கழவுப் பொருட்களை அகற்ற முடியும் என, சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages