40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 27 December 2017

40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை

ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாககூடஇருக்கலாம்.40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை

ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.

நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages