ஐபோன் விற்பனை குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு ஐபோனிற்கு ரூ.9000 வரை லாபம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.புதுடெல்லி: கவுண்ட்டர்பாயின்ட் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்பிள் வருடாந்திர லாபம் 30 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐபோன் விநியோகம் வருடாந்திர அடிப்படையில் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.
2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஆப்பிள் மொத்த லாபம் ஐபோன் X விற்பனையால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் ஐபோன் 8 அறிமுகம் மூலம் உற்சாகமாக துவங்கியிருந்தாலும், ஐபோன் 7 சீரிஸ் பெற்ற வரவேற்பை பெறவில்லை.
ஸ்மார்ட்போன் சந்தை லாபத்தை பொருத்த வரை 60 சதவிகித பங்குகளை பெற்று ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனினும் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் நோட் 7 பிரச்சனையில் சாம்சங் சிக்கியிருந்த போது ஆப்பிள் நிறுவனம் 86 சதவிகித பங்குகளை பெற்றிருந்ததுமுந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சர்வதேச மொபைல் போன் லாபம் 13 சதிவிகதம் வரை அதிகரித்துள்ளது. சாம்சங் மற்றும் சீன
ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் வரவு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
'ஒரே காலாண்டில் ஒட்டுமொத்த லாபத்தை இதுவரை சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டும் பகிர்ந்து வந்த நிலையில், சீன பிரான்டுகளும் கணிசமான லாபத்தை பதிவு செய்துள்ளன. அதன்படி சீன ஸ்மார்ட்போன் பிரான்டுகள் மட்டும் சுமார் 150 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாக கடந்துள்ளது.' என கவுண்ட்டர்பாயின்ட் நிறுவன இணை தலைவர் தருன் பதாக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment