மஹிந்த வேறு கட்சியின் தலைவராக முடியாது.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2017

மஹிந்த வேறு கட்சியின் தலைவராக முடியாது.!

Image result for mahinda rajapaksa
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை வகித்துக்கொண்டு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வேறு கட்சியின் தலைமைப் பொறுப் பினை ஏற்றுகொள்ள முடியாது. 
அவ்வாறு செயற்பட்டால் ஒழுக்காற்று நட வடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 
கட்சியின் கொள்கைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் சிரேஷ்ட உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்கப்போவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஆலோசகருமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வேறு கட்சிக்கு தலைமை தாங்குகிறார் என எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. பொதுஜன முன்னணியின் எந்தவொரு பொறுப்பையும் அவர் இதுவரையில் வகிக்கவில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர் ஒருவர் கட்சியில் கொள்கைக்கும் தலைமைத்துவத்திற்கும் முரணான வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிரிக்கட்சியின் அங்கத்தவதை ஏற்றுக்கொண்டால் அவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முரணாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விமர்சிக்கும்  நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் மாற்றுக் கருத்து இல்லை. முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்த விதிமுறை பொருந்தும். எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவதை வைத்துகொண்டு வேறு ஒரு முரண்பாடான கட்சிக்கு தலைமை பொறுப்பை வகிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages