கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் மனைவி என கூறி ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யுமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளை மிரட்டிய பெண் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சரின் மனைவி என கூறி தொலைப்பேசி ஊடாக ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக தொடர்ந்து நிர்பந்திக்கவும் சந்தேகம் ஏற்படவே குறித்த அதிகாரிகள் அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் மற்றும் அலுவலக வேலைகளுக்கு தனது மனைவி தொடர்பு படுவதில்லை என்றும் தனது மனைவியின் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையும் அதன் பின்னனியில் இருப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அமைச்சர் கல்வி அமைச்சின் விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு முதல் அமைச்சுப் பொறுப்பிலிருந்த அமைச்சர்களின் மனைவிமார்கள் ஆசிரிய நியமனம் இடமாற்றம் மற்றும் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுதல் தொடர்பாக அழைப்பை ஏற்படுத்தி நிர்பந்தித்துள்ளனர் எனினும் தற்போதைய அமைச்சரின் மனைவி இது வரை காலமும் அவ்வாறானதோர் செயற்பாட்டில் ஈடுபட்டதில்லை என்பதனால் தனக்கு சந்தேகம் தோன்றவே அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் பாதுகாப்பு துறை ஊடாக குறித்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சிற்கு வரும் மக்களை ஏமாற்றி பணம் பரிப்பவர்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு இது போன்ற அழுத்தங்களை கொடுப்பவர்கள் புலனாய்வு துறையினரின் உதவியுடன் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment