தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 23 December 2017

தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து

சமீப காலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பழங்கள், காய்கறிகளை கூவி, கூவி விற்பனை செய்பவர்கள் பலர். அவற்றினால் ஏற்படும் தீமைகள் பல.
தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து
சமீப காலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பழங்கள், காய்கறிகளை கூவி, கூவி விற்பனை செய்பவர்கள் பலர். விலை குறைவாக இருப்பதால் பலரும் அதை ஆர்வமாக வாங்குகிறார்கள். ஆனால், அவற்றின் எடை, தரம் போன்றவற்றை சரிபார்க்க முடிவதில்லை. அப்படி விற்பனை செய்யும் பலரும், தரமான காய்கறிகள், பழங்களுடன் தரம் குறைந்தவற்றையும் கலந்து விற்பனை செய்கின்றனர். அவற்றினால் ஏற்படும் தீமைகள் பல. விலை குறைவு என்பதால் வியாதிகளையும் வாங்கி விடுகிறோம்.

இந்த காய்கறிகள், பழங்களின் தரத்தை பரிசோதனை செய்ய ஆளில்லை. ஏனென்றால் விற்பனை செய்பவர்கள் நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. இதனால் மக்கள் பொருட்களின் தரம் குறித்து புகார் கூறவும் முடிவதில்லை. இது விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. புகார் ஏதும் வராததால், அதிகாரிகள் தரத்தை ஆய்வு செய்ய முற்படுவதில்லை.
தரமற்ற விளைப்பொருட்களை விற்பனை செய்து பணம் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கிலே அவர்கள் வலம் வருகின்றனர். இன்று ஒரு பகுதியில் விற்பனை செய்தால், மறுநாள் வேறு இடத்துக்கு இடம் பெயர்கின்றனர். அந்த பொருளை வாங்கும் நுகர்வோர் தரம் அறிந்து விற்பனையாளரை தேடும்போது, அவரை கண்டுபிடிக்க முடியாது. இதனால் பொருளை மாற்றவும் முடியாது. அதை வாங்கியவர்களுக்கு பணம் தான் வீணாகிறது.

இதேபோல் வாகனத்தில் வைத்து காய்கறிகள், பழங்களை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு படி சென்று துணிமணிகள், ஆடைகள், சி.எப்.எல். பல்புகள், கைக்கெடிகாரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் என விற்பனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒலிபெருக்கி மூலம் கூவி விற்பனை செய்யும் பொருட்களின் தரம் என்னவென்று பரிசோதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

-சொ.இளவளவன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages