அனுராதபுரம் மற்றும் நாரஹன்பிட்டி பாடசாலைகளில் நேற்று பரீட்சை மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு பாடசாலைகளில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் இருவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.




No comments:
Post a Comment