இந்திய டெலிகாம் சந்தையில் சேவை கட்டணங்களை நிர்ணயிப்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சேவை கட்டணங்களை அடிக்கடி மாற்றி வருகிறது.
முன்னதாக ஐடியா செல்லுலார் அறிவித்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது. ஐடியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 விலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்த சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.309 திட்டத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கெடு நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளின் கட்டணம் நொடிக்கு ஒரு பைசா வீதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாரம் 100க்கும் அதிக வெவ்வேறு எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.309 திட்டத்தில் 49 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 64 கே.பி-யாக குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ரூ.199 மற்றும் ரூ.349 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனமும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு திட்டங்களை முறையே ரூ.198 மற்றும் ரூ.349 விலையில் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் வழங்கப்படுகிறது. ரூ.198 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டாவும் ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment