சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி

இந்த கஞ்சி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தெம்பை தரும். எளிதில் ஜீரணமாகும். இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி
தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 கப் 
பயத்தம் பருப்பு - 1/4 கப் 
தண்ணீர் - 2 1/2 கப்
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கு
சீரகம் - தேவைக்கு
பூண்டு - 10  பல்செய்முறை :

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

அரிசி, பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.

கழுவிய அரிசியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

குக்கரில் கொரகொரப்பாக பொடித்த அரிசி, பயத்தம் பருப்பு, தண்ணீர், சீரகம், பூண்டு சேர்த்து 7 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து கடைசியில் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அருந்தவும். 

அருமையான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி ரெடி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages