இமாச்சல பிரதேசத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் நுழைய அனுமதி மறுத்த பெண் போலீசின் கண்ணத்தில் பெண் எம்.எல்.ஏ அறைய பதிலுக்கு போலீசும் திரும்ப அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிம்லா:
இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், கட்சியில் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் சிம்லா நகரில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி இக்கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் தொடங்கிய போது, திடீரென உள்ளே நுழைய முயன்ற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை அங்கிருந்த பெண் கான்ஸ்டபிள், ஆஷா குமாரியை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ கான்ஸ்டபிளின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.
எம்.எல்.ஏ திடீரென அடித்ததால் கோபமடைந்த கான்ஸ்டபிள் பதிலுக்கு அவரது கண்ணத்தில் அறைந்தார். இதனையடுத்து, இருவரும் மாறி மாறி இரண்டு முறை அறைந்தனர். பின்னர், அருகிலிருந்த போலீசார் இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.
ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
No comments:
Post a Comment