ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு

ஜனாதிபதி தலைமையில்  கொழும்பில்    பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு
ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது. 
 
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ பூட்டான் இந்தியா மியன்மார் நேபாளம் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
 
இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் பிராந்தியத்தில் வறுமையை இல்லாதொழித்து பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பலமான செயற்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்தார். 
 
பிராந்தியத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள்இ உலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகுமென தெரிவித்தார்.வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 
 
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருட மாநாட்டினை இலங்கையில் நடத்த முடிந்தமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ பிம்ஸ்டெக் அமைப்பின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு பிராந்தியத்தின் சகல நாடுகளினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்தினார்.
 
பங்களாதேஷ் நிதிஇ திட்டமிடல் அமைச்சர் மொஹமட் அப்துல் மன்னன்இ பூட்டான் நிதி அமைச்சர் நம்கெயி தோர்ஜி மியன்மார் விவசாயஇ விலங்கு வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் லாச்சோஇ தாய்லாந்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நதாபித் ஸ்நிடிவொக்ஸ் உள்ளிட்ட பிரதிநிதிளும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி வீரக்கோன் உள்ளிட்ட குழுவினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages