இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் கடமையாற்றிய பணிப்பாளர் சபையிலுள்ள 6 அங்கத்தவர்கள் திடீரென தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த ராஜினாமாவின் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் புதுப்பிக்கப்பட வேண்டுமாயின், அந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பழைய உறுப்பினர்கள் விலக வேண்டும் என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.தேவேளை, இந்த பதவி விலகல் தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்கள் குறித்து ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை தான் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடுவெல வாராந்த சந்தைத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமான சேவையின் மூலம் பொதுமக்களின் பாரியளவான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment