காலையில் இந்த உணவுகள் வேண்டாமே! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 27 December 2017

காலையில் இந்த உணவுகள் வேண்டாமே!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும்.காலையில் இந்த உணவுகள் வேண்டாமே!காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும்.

வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்தும். காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்தி விடும்.

சிட்ரஸ் பழ வகைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை செரிமானத்தை தாமதப்படுத்தும்.கொய்யா, ஆரஞ்சு பழங்களை காலையில் சாப்பிடவே கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் வயிற்றுக்கு தீங்கு இழைக்கும். அவைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.

தூங்கி எழுந்ததும் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் பருகும்போது இரைப்பை அழற்சி ஏற்படும். செரிமான கோளாறும் தோன்றக்கூடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages