செய்முறை
கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.
நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.
காலை, மாலை என 200-40 நிமிடங்கள் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.
பலன்கள்
பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பெருங்குடலின் கடைமடைப் பகுதியில் இசைவுத்தன்மையை உண்டாக்கி, இலகுவாக மலம் வெளியேற உதவும்.
நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலி சரியாகும்.
வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.



No comments:
Post a Comment