விளையாட்டு அமைச்சின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 22 December 2017

விளையாட்டு அமைச்சின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு

விளையாட்டு அமைச்சின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு
விளையாட்டு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நினைவு முத்திரையும் முதல்நாள் அஞ்சல் உறையும் வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜயசேகரவினால் நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் அஞ்சல் உறை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் போது ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தினேஸ் பிரியந்த ஹேரத்திற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 இலட்ச ரூபாவும் விளையாட்டு அமைச்சின் நிதியத்திலிருந்து 15 இலட்சம் ரூபாயும் வழங்கப்படுவதற்கான காசோலைகள் ஜனாதிபதியினால் தினேஸ் பிரியந்த ஹேரத்திற்கு வழங்கப்பட்டது.

இதன்போது அவரின் பயிற்சியாளரான பிரதீப் நிசாந்த அப்புகாமியும் இணைந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார, தேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க, விளையாட்டு அமைச்சின் ஆலோசகர் சுசந்திகா ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages