மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 21 December 2017

மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை

மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை
வழக்கு விசாரணைகளின் தாமத்தை நீக்க மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும்  வழக்குகளை விசாரிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக குற்றவியல் நடைமுறை கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
 
1979ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் திருமதி தலதா அதுகோரலவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
இது தெடர்பாக நேற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தெரிவிக்கையில் கடந்த செப்டெம்பர் மாதம் அளவில் மேல் நீதிமன்றங்களில் 17 ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணை நடைமுறைகளில் நிலவும் தேக்க நிலைக்கு தீர்வு காண்பதற்காக நாள்தோறும் வழக்கு விசாரணைகளை கட்டாயமாக்குது என்று தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages