கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதினால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , வடக்கு ,கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, இரத்தினபுரி, காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மன்னார் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கரையோரபிரதேசத்திலும் காலி மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிரதேசம் ஓளரவு கொந்தளிப்புடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் பிரதேசங்களில் 70 கிலோமீற்றருக்கும் 80 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட வேகத்தில் தற்காலிகமாக காற்றுவீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment