சுற்றுலா பயணிகளை பாதுகாப்பது தொடர்பில் இலங்கைக்கு உயர்வான இடம் கிடைத்திருப்பதாக சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைவாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுக்கு மோட்டார் சைக்கில் பிச் றொவர் என்ற வாகனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் குறிப்பிட்டார்.
சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம் பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கி வருகின்றது. சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் சுற்றுலாவை மேற்கொள்ளும் போது அந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துவர்.
இந்த விடயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் இலங்கை உயர் நிலையில் இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனை நாம் மேலும் உறுதி செய்யவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் சிகிரியா, அறுகம்பே , அனுராதபுரம் ,நீர்கொழும்பு ,மொனராகலை , பாசிக்குடா , பொலன்னறுவை , கண்டி உள்ளிட்ட சுற்றுலா பாதுகாப்பு பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment