வகங்கை அருகே சிராவயல் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் வேடிக்கை பார்த்த 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள், ஆர்வத்துடன் காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல் பகுதியிலும் இன்று மஞ்சுவிரட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிவகங்கை மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மைதானத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் துரத்திச் சென்றனர். அப்போது சில காளைகள் பார்வையாளர்கள் பக்கம் சீறிப் பாய்ந்து ஓடியது. அப்போது வேடிக்கை பார்க்க திரண்டிருந்த பொதுமக்களை மாடுகள் முட்டி தூக்கி வீசின. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன
No comments:
Post a Comment