2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப்பெறும் துணிச்சல் மிகு ஆண்டாக அமைய வேண்டும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 1 January 2018

2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப்பெறும் துணிச்சல் மிகு ஆண்டாக அமைய வேண்டும்

Image result for 2018 ..
2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப்பெறும் துணிச்சல் மிகு ஆண்டாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன் 
2018 அம் ஆண்டு புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு:
புது வருட வாழ்த்துச் செய்தி
நீண்ட கால மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அரசியல் சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திய நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு பிறக்கிறது.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்படும்போது நாட்டில் பாரிய சமூக, பொருளாதார, அரசியல் வீழ்ச்சி காணப்பட்டதுடன், கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில்கூட நிலைபேறான அபிவிருத்திச் செயற்பாடு ஊடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.
கடந்த காலப்பகுதியில் மக்களுக்கு சமூக, அரசியல், மானிட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும், சர்வதேசரீதியாக எமது நாடு தொடர்பாகக் காணப்பட்ட எதிர்மறையான மனப்பாங்குகளை மாற்றியமைத்து நட்புணர்வுமிக்க சூழலொன்றைக் கட்டியெழுப்பவும் முக்கிய கவனத்தினை செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது எமக்கு அவற்றின் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமான நிலைமை காணப்படுகிறது.
ஜனநாயக, தார்மீகப் பண்புகள் கொண்ட முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது அரசாங்கம் இது வரைக்கும் மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், மிகுந்த பலத்துடன் இந்த வருடத்திலும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல நீங்கள் எம்மோடு இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்;டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages