புதுடெல்லி:
இதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட திட்டங்களில் சேவை 43 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக 50 சதவிகித டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.485 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதேபோன்று ரூ.666 ரீசார்ஜ் செய்தால் 129 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
ரூ.186, ரூ.187 சிறப்பு திட்டங்களை தேர்வு செய்வோருக்கு 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவும், ரூ.349 மற்றும் ரூ.429 செலுத்துவோருக்கு முறையே 54 நாட்கள் மற்றும் 81 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகின்றது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். மற்றும் டீடெல் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் டி1 என்ற பெயரில் பீச்சர்போனினை ரூ.499 விலையில் வெளியிட்டன. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.103 மதிப்புடைய டாக்டைம் வழங்கப்படுகிறது. இதில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு நிமிடத்திற்கு 0.15 பைசா மற்ற நெட்வொர்க் எண்களுக்கு நிமிடத்திற்கு 0.40 பைசா வசூலிக்கப்படுகின்றது.
பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பிதிவிடப்பட்டுள்ள புகைப்படத்தில் 3ஜி ஜி.எஸ்.எம். ஸ்மார்ட்போன்களில் பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளவு இலவச டேட்டா வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்பது நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். வழங்கும் புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகைகள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் முதல் முறை இண்டர்நெட் பயன்படுத்துவோருக்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment