உலகம் முழுவதும் 2018 புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி அன்று 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:உலகம் முழுவதும் 2018 புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி அன்று 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக ‘யுனிசெப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதி அளவு குழந்தைகள் வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளில் பிறந்துள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறந்தன. உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அங்கு புத்தாண்டு தினத்தில் 44,760 குழந்தைகள் பிறந்தன.
நைஜீரியா 3-வது இடத்தில் உள்ளது. அங்கு புத்தாண்டில் 20,210 குழந்தைகள் பிறந்துள்ளன என்று யுனி செப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment