சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமராவுடன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ரெட்மி நோட் 5 சோதனை செய்யப்படுகிறது என்றும், ஸ்னாப்டிராகன் 632 வெளியீட்டிற்காக ஸ்மார்ட்போன் வெளியீடு தாமதமாகிறது என்றும் இந்த ஸ்மார்ட்போன் CNY1,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,700 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு குவால்காம் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்டை விட புதிய ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் குறைந்த செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய சிப்செட் குவால்காம் ஸ்பெக்ட்ரா 160 ISP மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோடெம் டூயல் கேமரா அமைப்புகளை சீராக இயக்க வழி செய்யும்.
அந்த வகையில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஸ்கிரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.1 இயங்குதளம் கண்டு இயங்கும் என கூறப்பட்டது.
மெமரியை பொருத்த வரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி நோட் 5 வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 5.5 இனஅச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment