அத்தியாவசியப் பொருள் விலையில் வீழ்ச்சி? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

அத்தியாவசியப் பொருள் விலையில் வீழ்ச்சி?

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் எனத் தாம் நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்Image result for ranil wickramasinghe.
நாட்டின் முதலாவது ‘மெகா சதொச’ நிலையம் இன்று (5) வெலிசறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்படி தெரிவித்தார்.
“சதொச மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. பருவமில்லாத காலங்களிலும் அனைத்து காய்கறி மற்றும் தானிய வகைகளை ஒரே விலையில் விற்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் நடமாடும் சதொச நிலையங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கும் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கும்போது, இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 25 சுப்பர் மெகா சதொச நிலையங்கள் உட்பட 100 சதொச நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 28 சதொச நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages