மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கருத்திற் கொண்டும்இ தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயற்படுமாறு மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் வழமையாக தமிழர்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் பண்டிகைகள்இ விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இவ்வருடம் அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கவுள்ளனர்.
இந்நிகழ்வை தேசிய நிகழ்வாக நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக தைத்திருநாளின் மறுநாள் திங்கட்கிழமை (15) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியாதுள்ளது.
மத்திய மாகாணத்தை பொருத்த வரையில் இனிவரும் தமிழர்களின் பண்பாட்டு விழா காலங்களில்இ தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவற்கான ஏற்பாடுகளை தமிழ் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment