அனைத்தும் பொய் நாடகம் : கெஹ­லிய - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

அனைத்தும் பொய் நாடகம் : கெஹ­லிய

மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்தில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அனை த்து விட­யங்­களும் பொய் நாடகங்­க­ளே­யாகும். இந்த முறைக்­கேட்டில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை பாது­காப்­ப­தற்கே முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். 
Image result for கெஹ­லிய in hd
மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் ஜான­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
கெஹ­லிய ரம்­புக்­வெல்ல எம்.பி. இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,
மத்­திய வங்கி பினை­முறி விவ­கா­ரத்தில் அனைத்து விட­யங்­களும் பொய் நாட­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. இதில் தவ­றி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனைப் பெற்றுக் கொடுப்­ப­ப­தற்­கான முயற்­சிகள் நேர்­மை­யான முறையில் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை. மாறாக சம்­பந்­தப்­பட்­டோரை பாது­காப்­ப­தற்கே முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. 
ஆரம்­பத்­தி­லி­ருந்தே இது தொடர்­பான செயற்­பா­டுகள் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. ஆரம்­பத்தில் 2015 ஆம் ஆண்டு மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக வெ ளிநாட்டுப் பிர­ஜை­யொ­ரு­வரை நிய­மிக்க பிர­தமர் முற்­பட்­ட­போது அமைச்­ச­ரவை அதனை எதிர்த்­துள்­ளது. எனினும் தான் அதனை பொறுப்­பேற்ப்­ப­தாக கூறி அந்த நிய­மணம் செய்­யப்­பட்­டுள்­ளது. இறு­தியில் இவ்­வ­ளவு பெரிய மோசடி இடம்­பெற்­றுள்­ளது.
ஆனால் தற்­போது நடை­பெறும் அனைத்து விட­யங்­க­ளையும் பார்க்­கும்­போது சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரையும் பாது­காப்­ப­தற்­கான பொய் நாட­கமே இடம்­பெ­று­வ­தாக எமக்கு தோன்­று­கின்­றது என்றார். 
மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது விசா­ரணை அறிக்­கையை ஜனா­தி­பதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடந்த 31 ஆம் திகதி கையளித்தது. அந்த அறிக்கையை வாசித்து முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது தொடர்பான தனது நிலைப்பாட்டை கடந்த புதன்கிழமை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages