புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.
கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13 ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி முடிவடையும்.
முதலாம் கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும் 58 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும்.
குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிக்காக பயன்படுத்தப்படும் 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டிருக்கும். அவற்றில் முதலாம் தவணை திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment