மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி

துளசி க்கான பட முடிவு


துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. 
 
துளசியின் மருத்துவப் பலன்கள்: 
 
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட  கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
 
ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு  பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும்.
 
வாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது. சிறுநீரக கல், சிறுநீரக தொற்று  போன்றவைகளையும் இது குணப்படுத்தும்.
 
துளசி சிறந்த கிருமிநாசினியாக செய்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளால் உண்டாகும் நோய் தொற்றுகளை அழிக்கும். துளசி கஷாயம் தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோயின் வீரியம் குறையும்.
 
துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால்  பாதுகாக்கப்படுகிறது.
 
துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும். துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும். தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து  அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages