செவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

செவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

செவ்வாய் கிரகத்தில் மின்சாரம் மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தியை பயன்படுத்த அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.

Image result for செவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன்: 

நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா முடிவெடுத்தது. அதற்கான திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

இந்த நிலையில் தற்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பொதுவாக பூமியை விட்டு சென்ற பின் மனிதர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை மின்சாரம். மனிதர்களின் எரிபொருள் தேவையை அங்கு பூர்த்தி செய்வது மிகவும் கடினம். தற்போது நாசா அமைப்பு அதற்கு பெரிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.



அதற்காக நவேடா மாகாணத்தில் நாசாவின் முதல்கட்ட சோதனை நடந்தது. அணுசக்தி மூலம் விண்வெளியில் இருக்கும் பொருட்களை இயங்க வைக்க முயற்சி செய்யப்பட்டது. இதன் மூலம் செய்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய முடியும் என்று கூறப்பட்டது. இந்த முதல் கட்ட சோதனை ஓரளவுக்கு வெற்றியில் முடிந்தது.

அதன்பின் நாசா அமைப்பு இரண்டாம் கட்ட சோதனையையும் செய்தது. ரோபோட்டிக் மிஷின், செயற்கைக்கோள் என அனைத்து பொருள்களிலும் அணு சக்தியை மின்சார தேவைக்கு பயன்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது முயற்சியானது எந்த தவறுமின்றி நாசா அமைப்பால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு புளுட்டோனியம் 238 ஆக்சைடு என்ற அணு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேப்பர் பொட்டலம் அளவிற்கு இது தேவைப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது. இதை ஒன்றாக இணைய வைத்து அதன்மூலம் சக்தியை உருவாக்கி பொருட்களை இயங்க வைக்கலாம் என்று நாசா கண்டுபிடித்திருக்கிறது.

இதற்காக தற்போது ஒரு மாதிரி எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக வடிவமைத்த பின் எந்த கிரகத்திற்கும் செல்ல முடியும். எங்கும் எளிதாக மின்சார, சக்தி தேவைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது நாசாவிடம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages