நான் புரிந்து கொண்ட இஸ்லாம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

நான் புரிந்து கொண்ட இஸ்லாம்

Image result for . இஸ்லாம்
எதார்த்த இறைவனை புரிவோம்
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனைப்பற்றி எவ்வளவு அழகாக சொல்லப்படுகின்றது அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்துரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.
நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனம் மதம் இஸம் உள்ளது அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது வக்காலத்தும் பேசுகின்றது ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!
உன் தெய்வம் வேறு என் தெய்வம் வேறு என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இசங்களும் மதங்களும் உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா அதுவும் இல்லை. ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு கும்மாலமும் போடுகின்றது. இந்த பூமியைப்படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி இவ்வாறு கேட்கின்றான். 
உங்களுக்கு வானத்திலிருந்தும்பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும்உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்விதான் இது இந்தக்கேள்விக்கு முஸ்லிம் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த  சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ம னிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.
    மரணத்தை ஏற்காத எந்த மனிதனும் கிடையாது அதுபோலவே அதை மறுக்கின்ற மனிதனும் கிடையாது அதிலிருந்து விதிவிலக்கானவர்களும் கிடையாது அந்த அளவுக்கு உண்மையான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா?  மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது
எங்கிருந்து வந்தோம் எங்கே போகவிருக்கின்றோம்  என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த மதம் போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மனிதன் படைத்தவனைவிட்டு படைப்புக்களை வணங்குவது எந்தவகையில் ஞாயம் என்பதை இறைவன் நிரூபிக்க சொல்கின்றான். 
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா?,என்று (நபியே!) நீர் கேட்பீராக  அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான்பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டுநீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தின் மீதும் விரல் சுண்டிக் காட்டுகின்றான்

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டாஎன்று கேட்பீராக  அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா?வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனாஉங்களுக்கு என்ன நேர்ந்து விட்டதுஎவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

ஆனால்அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
உண்மையை உணராமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இரைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலும் அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று(அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும்அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை.
"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதாஇஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால்இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!என்று.
நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் அண்டசராசரங்களையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு? ஜீவி(ஜந்துக்)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.
இதுவரை பூமியில் தோன்றி மறைந்த தோன்றவிருக்கின்ற யாராலும் முறியடிக்க முடியாத நடக்காத  காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது
நான் நினைக்கின்றேன் ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம்
நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்
அப்படியல்ல  அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் இது அதாவது மேலே கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான்.  மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான் அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.
வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம்.
ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது.
அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமாஎன யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் அம்மன் என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.
இதுபற்றி பிறகு பார்ப்போம்.
ஆண் தெய்வம்பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள்.
அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில்இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...
உற்சவம்திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள். 
நன்றி: இந்துமதம் எங்கே போகிறது
இப்படி மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர். 
 அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்  இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages