சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யை கைது செய்ய தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
கொச்சி:
ரூ.20 லட்சத்துக்கு மேல் மதிப்புடைய சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்ய 20 சதவீத வாகன வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காக, பிரபல மலையாள கதாநாயகனும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, தனது 2 சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்ததாகவும், இதற்காக போலி முகவரியை கொடுத்ததாகவும் அவர் மீது கேரள போலீசார் கடந்த மாதம் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சுரேஷ் கோபி, கடந்த மாதம் 12-ந் தேதி, கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனால், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இம்மனு நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரேஷ் கோபியை மேலும் 10 நாட்களுக்கு கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment