நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய உடற்பயிற்சி அவசியமாகிறது.
உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, மூடநம்பிக்கைகள். நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வோர் உடற்பயிற்சிக்கும் நன்மைகளும் உண்டு, பக்கவிளைவுகளும் உண்டு. உதாரணமாக, ஏரோபிக் பயிற்சிகளால் கொழுப்பு மட்டும் குறையும். நாம் உண்ணும் உணவின் மூலம் 1200 கலோரி கிடைக்கிறது.
உடற்பயிற்சியால் 1400 கலோரி எரிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது உணவிலிருந்து கிடைக்கும் கலோரியின் அளவை விட எரிக்கப்படும் கலோரியின் அளவு அதிகமாக இருக்கும்போது, மீதி 200 கலோரி உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
இதனால் உடலுக்குத் தேவையான கலோரிப் பற்றாக்குறை ஏற்படும். எனர்ஜி லெவல் குறையும். அதனால் நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, நமக்கான செயல்களை நாமே செய்து பழகுவது, கூடுமானவரை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது போன்று நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அலுவலகத்தில் லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருள்கள் வாங்கலாம்.
No comments:
Post a Comment