இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ரகசிய சந்திப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ரகசிய சந்திப்பு

இந்தியா, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்து நாட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ரகசிய சந்திப்புஇஸ்லாமாபாத்:
இந்தியா, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்து நாட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நாசர்கான் ஜனுஜா ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு கடந்த 27-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்ததாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனது பெயரை வெளியிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பு நல்லவிதமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அஜித் தோவலின் பேச்சு நட்புடனும், நேர்மறையாகவும் இருந்தது. இந்த சந்திப்பு, இருநாட்டு தூதரக அளவில் நின்றுபோன சில நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வம் இல்லாமலோ யாரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கடந்த 25-ந் தேதி, பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி சந்தித்து பேசினார்கள். இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டுள்ள சமயத்தில், சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வும் ஒரு முக்கியமானதாக ஆகிவிட்டது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages